சமிக் பட்டாச்சார்யா
இந்திய அரசியல்வாதி
சமிக் பட்டாச்சார்யா (Samik Bhattacharya-பிறப்பு 5 நவம்பர் 1963) என்பவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 3 ஏப்ரல் 2024 முதல் மேற்கு வங்கத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான[1] பட்டாச்சார்யா 2014 முதல் 2016 வரை மேற்கு வங்க சட்டப்பேரவையின் பாசிர்கத் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் உறுப்பினராக இருந்தார். 2020 முதல் 2024 வரை மேற்கு வங்கத்தின் பாஜக தலைமை செய்தித் தொடர்பாளராகவும் இருந்துள்ளார்.[2] [3]
சமிக் பட்டாச்சார்யா | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 ஏப்ரல் 2024 | |
முன்னையவர் | அபிஷேக் சிங்வி |
தொகுதி | மேற்கு வங்காளம் |
மேற்கு வங்க சட்டமன்றம் | |
பதவியில் 26 செப்டம்பர் 2014 – 19 மே 2016 | |
முன்னையவர் | நாராயணன் முகர்ஜி |
பின்னவர் | திபேந்து பிசுவாசு |
தொகுதி | பாசிர்ஹத் தெற்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 நவம்பர் 1963 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
கல்வி | இளங்கலை (Pass) |
முன்னாள் கல்லூரி | கொல்கத்தா பல்கலைக்கழகம் (1988) |
வேலை | அரசியல்வாதி |
2024ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக சமிக் பட்டாச்சார்யா பரிந்துரைக்கப்பட்டார்.சமிக் பட்டாச்சார்யா ஏப்ரல் 04 அன்று புதிய மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "State Education Policy: Oppn attacks Bengal govt, says it has money to hike salary of ministers but little to spend on education". The Indian Express (in ஆங்கிலம்). 2023-09-11. பார்க்கப்பட்ட நாள் 2024-02-11.
- ↑ "Bypoll results: West Bengal Assembly now has a BJP MLA". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-11.
- ↑ "BJP workers demand district chief ouster". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-11.