சமூக நுண்ணறிவு
1920 ஆம் ஆண்டில் இ. எல். தார்ண்டைக் நுண்ணறிவை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தினார்.[1] கருத்தியல் நுண்ணறிவு, பொறியியல் நுண்ணறிவு, மற்றும் சமூக நுண்ணறிவு. சமூக நுண்ணறிவு (social intelligence) என்பது மனித உறவுகளைச் செம்மைப்படுத்துதலைக் குறிக்கிறது.[2] மனிதர்கள் தம் உணர்ச்சிகளைச் செம்மைப்படுத்தி உறவுகளை மேம்படுத்துவதற்கு சமூக நுண்ணறிவு துணை புரிகிறது. தார்ண்டைக்கின் சமூக நுண்ணறிவுப் பற்றிய கோட்பாட்டினைப் பயன்படுத்தி 1983 இல் ஜவார்டு கார்டனர் பன்முனை நுண்ணறிவு கோட்பாட்டினை வெளியிட்டார்.[3] இதில் தன் நுண்ணறிவு பிறர்சார் நுண்ணறிவு அடங்கும். பிறர்சார் நுண்ணறிவு என்பது நம் உணர்வுகளைப் பற்றி புரிந்து கொண்டு, பிறரை அனுசரித்து வாழ்க்கையினை திறம்பட நடத்தும் திறனைக் குறிக்கிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Thorndike, E.L. (1920). Intelligence and its use. Harper's Magazine, 140, 227-235.,
- ↑ Honeywill, Ross 2015, The Man Problem: destructive masculinity in Western culture, Palgrave Macmillan, New York.
- ↑ 3.0 3.1 Ganaie, MY & Mudasir, Hafiz, 'A Study of Social Intelligence & Academic Achievement of College Students of District Srinagar', Journal of American Science 2015; 11(3)
வெளி இணைப்புகள்
தொகு- The Social Intelligence Lab
- The Preeminent Intelligence - Social IQ, Raymond H. Hartjen பரணிடப்பட்டது 2017-12-26 at the வந்தவழி இயந்திரம்
- Socially superior, Times Online