சமூக வலைத் தளம்
சமூக வலைத் தளம் (social networking site) என்று ஒத்தக் கருத்துடையோர் அல்லது செயற்பாடு கொண்டோரின் சமூகத்தை வளர்க்கவும் அவர்களிடையே உள்ள சமூகப் பிணைப்புகளை வெளிப்படுத்தn.வும் வழிசெய்கின்ற ஓர் இணையச் சேவை, தளம், அல்லது வலைத்தளம் ஆகும். இவ்வகையான இணையத்தளங்கள் சமூகத்தை எப்போதும் ஒன்றாக இணைத்து வைத்திருத்தலை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன. பெரும்பான்மையான சமூக கட்டமைப்பு வலைத்தளங்கள் தமது சேவையினை இலவசமாகவே வழங்கி வருகின்றன. ஒரு பொதுவான சமூக வலைத் தளம் ஒவ்வொரு பயனர் குறித்த தகவல்களையும் (சுயவிவரம்), அவரது சமூக பிணைப்புகள் மற்றும் பல்வேறு சேவைகளையும் கொண்டிருக்கும். பெரும்பாலும் இவை இணையத்தில் அமைக்கப்பட்டு பயனர்கள் மின்னஞ்சல், உடனடி தகவல் சேவைகள் போன்ற இணையவழியே உறவாட வகை செய்யும். சிலநேரங்களில் இணையச் சமூகச் சேவைகள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டாலும் சமூக வலைத்தளங்கள் வழமையாக தனிநபர் சார்ந்த சேவைகளாக இருக்கும். இந்த வலைத்தளங்கள் தங்கள் பயனர்கள் தங்களுக்குள் கருத்துக்கள், செயற்பாடுகள், நிகழ்வுகள், இலக்குகள், நோக்கங்கள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ள வழிசெய்கின்றன.
பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் முன்னாள் பள்ளி/கல்லூரி மாணவர்கள், ஒரே பணி/பணியிடம்,வாழிடம் போன்ற பகுப்புகளில் தங்கள் நண்பர்களை (தன்விவர குறிப்புக்கள் மூலம்) அடையாளம் காணக்கூடிய தளங்களையும் நம்பிக்கைக்குரிய பரிந்துரை அமைப்புகளை வழங்கும் அமைப்புகளையும் கொண்டுள்ளன. இவற்றில் உலகளவில் பரவலாகப் பயன்படுத்தப் படுபவையாக ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் உள்ளன. ஆர்க்குட் , லிங்டின் மற்றும் கூகுள்+ இந்தியாவில் பரவலாக்கம் பெற்றுள்ளன.
மீண்டும் மீண்டும் ஒரு பயனர் தன் விவரங்களை பல்வேறு சேவைகளிலும் பதிவதைத் தவிர்க்கும் வகையில் சீர்தரப்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு 2011ஆம் ஆண்டுக் கருத்துக்கணிப்பு 47% அமெரிக்கர்கள் சமூக வலைத்தளங்களைப் பாவிப்பதாக கண்டறிந்துள்ளது.[1]
2011ஆம் ஆண்டு அராபிய இளவேனில் என அழைக்கப்படும் எழுச்சிப்போர்களின் காலத்தில் ஒத்த கருத்துடைய எதிர்ப்பாளர்கள் தங்கள் நிலைப்பாட்டை பரப்பிடவும் தங்கள் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் சமூக வலைத்தளங்களை பெரிதும் பயன்படுத்தினர்.
மேற்கோள்கள்
தொகுமேல் விவரங்களுக்கு
தொகு- Alemán, Ana M. Martínez; Wartman, Katherine Lynk, "Online social networking on campus: understanding what matters in student culture", New York and London : Routledge, 1st edition, 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-99019-X
- Barham, Nick, Disconnected: Why our kids are turning their backs on everything we thought we knew, 1st ed., Ebury Press, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-09-189586-3
- Baron, Naomi S., Always on : language in an online and mobile world, Oxford ; New York : Oxford University Press, 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-531305-5
- Cockrell, Cathy, "Plumbing the mysterious practices of 'digital youth': In first public report from a 'seminal' study, UC Berkeley scholars shed light on kids' use of Web 2.0 tools", UC Berkeley News, University of California, Berkeley, NewsCenter, 28 April 2008
- Kelsey, Todd (2010), Social Networking Spaces: From Facebook to Twitter and Everything In Between, Springer-Verlag, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781430225966
{{citation}}
: Cite has empty unknown parameter:|coauthor=
(help) - Davis, Donald Carrington, "MySpace Isn't Your Space: Expanding the Fair Credit Reporting Act to Ensure Accountability and Fairness in Employer Searches of Online Social Networking Services" பரணிடப்பட்டது 2010-06-26 at the வந்தவழி இயந்திரம், 16 Kan. J.L. & Pub. Pol'y 237 (2007).
- Else, Liz; Turkle, Sherry. "Living online: I'll have to ask my friends", New Scientist, issue 2569, 20 September 2006. (interview)
- Glaser, Mark, Your Guide to Social Networking Online பரணிடப்பட்டது 2008-09-14 at the வந்தவழி இயந்திரம்," PBS MediaShift, August 2007
- Powers, William, Hamlet’s Blackberry : a practical philosophy for building a good life in the digital age, 1st ed., New York : Harper, 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-168716-7
- Video on the History of social networks by WikiLecture பரணிடப்பட்டது 2013-09-20 at the வந்தவழி இயந்திரம்
- C. Infant Louis Richards , "Advanced Techniques to overcome privacy issues and SNS threats" [ http://rspublication.com/ijam/oct%2011pdf/1.pdf[தொடர்பிழந்த இணைப்பு] ] October, 2011