சமூது
சமூது (Thamūd, அரபு: ثمود) இனத்தவர் எனப்படுவோர் முகம்மது நபி அவர்களின் காலத்திற்கு மிக முன்னர் கிமு 1ம் நூற்றாண்டு காலப்பகுதியில் பண்டைய அராபியத் தீபகற்பத்தில் வாழ்ந்த மக்களாவர். தென் அரேபியாவில் இவர்கள் தோன்றியதாகக் கருதப்பட்டாலும், இவர்கள வடக்கே அத்லப் மலைப் பகுதிக்கு இடம் பெயர்ந்ததாகக் கருதப்படுகிறது. சமூது மக்கள் தண்டிக்கப்பட்டதாகவும், ஒலி அலை ஒன்று இவர்களை அழித்ததாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது[1].
அத்லப் மலைப் பகுதியிலும், நடு அராபியாவின் பெரும் பகுதியிலும் சமூது மக்களைப் பற்றிய பல்வேறு பாறை எழுத்துகளும் ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ M. Th. Houtsma et al., eds., E.J. Brill's first encyclopaedia of Islam, 1913-1936
- ↑ Encyclopædia Britannica Online
வெளி இணைப்புகள்
தொகு- Photos of Thamud dwellings at Madain Saleh, Saudi Arabia பரணிடப்பட்டது 2012-02-11 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)
- The story of the Prophet Salih - (ஆங்கில மொழியில்)