சம்சித்தின் வோகிதோவு

உசுபெக்கிசுத்தான் சதுரங்க வீரர்

சம்சித்தின் வோகிதோவு (Shamsiddin Vokhidov) உசுபெக்கிசுத்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 2020 ஆம் ஆண்டு இவருக்கு கிராண்டுமாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது.[2]

சம்சித்தின் வோகிதோவு
Shamsiddin Vokhidov
நாடு உஸ்பெகிஸ்தான்
பிறப்புசனவரி 11, 2002 (2002-01-11) (அகவை 22)[1]
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2020)
பிடே தரவுகோள்2536 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2601 (பிப்ரவரி 2023)

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலக இளைஞர் சதுரங்கப் போட்டியில் வோகிதோவு வென்றார்.[3]

16 வயதில், வோகிதோவு 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக விரைவு சதுரங்க வெற்றியாளர் போட்டியில் உலக சதுரங்க வெற்றியாளர் மேக்னசு கார்ல்சனை தோற்கடித்தார்.[4]

2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற ஆசிய ஐப்ரிட்டு வெற்றியாளர் கோபையை வோகிதோவு வென்றார். 2021 சதுரங்க உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றார்.[5] முதல் சுற்றில் லூகா பைசாட்சேவை தோற்கடித்தார். ஆனால் இரண்டாவது சுற்றில் செர்கி கர்சாகினால் தோற்கடிக்கப்பட்டார்.

2023 ஆம் ஆண்டு அல்மாத்தியில் நடைபெற்ற ஆசிய சதுரங்க வெற்றியாளர் போட்டியை சம்சித்தின் வோகிதோவு வென்றார்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. https://www.chessgames.com/perl/chessplayer?pid=149948
  2. "Vokhidov, Shamsiddin". ratings.fide.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-29.
  3. "Tamil Nadu State Chess Association - India won 11 medals in the World Youth and Cadet Chess Championship". tamilchess.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-29.
  4. "Shamsiddin Vokhidov wins Asian Individual Hybrid Chess Championship 2021". Chess News (in ஆங்கிலம்). 2021-06-02. பார்க்கப்பட்ட நாள் 2021-06-29.
  5. "Shamsiddin Vokhidov wins Asian Hybrid Championship". www.fide.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-29.
  6. Asian Continental Men Chess Championship 2023

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்சித்தின்_வோகிதோவு&oldid=3859045" இலிருந்து மீள்விக்கப்பட்டது