சம்பூர் சமர்

ஈழப்போரில் நடந்த ஒரு சமர்

சம்பூர் சமர் (Battle of Sampur) என்பது இலங்கை உள்நாட்டுப் போரின்போது 2006 இல் சம்பூர் நகருக்காக நடந்த ஒரு சமராகும்.

சம்பூர் சமர்
ஈழப் போர் பகுதி
நாள் 28 ஆகத்து 2006 – 4 செப்டம்பர் 2006
இடம் சம்பூர், இலங்கை
இலங்கை இராணுவம் வெற்றி
பிரிவினர்
இலங்கைப் படைத்துறை தமிழீழ விடுதலைப் புலிகள்
இழப்புகள்
33 பேர் கொல்லப்பட்டனர் (இலங்கை இராணுவத்தின் கூற்று) [சான்று தேவை] 200+ பேர் கொல்லப்பட்டனர் (இலங்கை இராணுவத்தின் கூற்று) [சான்று தேவை]
97 பொதுமக்கள் கொல்லபட்டனர், 215 பொதுமக்கள் காயமுற்றனர், 46,000 பேர் இடம்பெயர்ந்தனர் (புலிகளின் கூற்று)[1]

பின்னணி

தொகு

உள்நாட்டுப் போர் மீண்டும் தொடங்கியதிலிருந்து, திருக்கோணமலையில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த [2] இலங்கை கடற்படைத் தளமானது, திருகோணமலையில் இருந்து கொடியார் குடாவிற்கு அப்பால் அமைந்துள்ள சம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விடுதலைப் புலிகளின் பீரங்கி நிலைகளால் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக இராணுவ அமைப்புகள் மத்தியில் கவலை அதிகரித்தது.[3][4] அப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் தளங்களில் இருந்து வீசப்படும் பீரங்கி குண்டுகள் கடற்படைத் தளத்தை முடக்கி, அதை முற்றாக ஸ்தம்பிக்கச் செய்து, யாழ்ப்பாணத்திற்கான ஒரேயொரு இராணுவ விநியோகச் சங்கிலியை துண்டித்துவிடும் நிலை இருந்தது. கடற்படைக் கப்பல்களின் அனைத்து நகர்வுகளும் விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் இருந்துவந்தன.[3] இந்த அச்சங்கள் 2005 இல் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராணுவ ஆலோசனைக் குழுவாலும் கூறப்பட்டது.

சமர்

தொகு

மாவிலாறு (மாவில் ஓயா), மூதூர் (மூடுதர) ஆகிய இடங்களில் நடந்த மோதல்களைத் தொடர்ந்து, திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்தை இலக்கு வைத்து புலிகள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருந்தனர்,[4] ஆகத்து 21 அன்று ஒரு உரையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே, சம்பூரில் புலிகளின் அச்சுறுத்தலை இல்லாமலாக்குவதே அரசாங்கத்தின் முதல் நோக்கம் என்பதை தெளிவுபடுத்தினார்.[4] ஆகத்து 28 அன்று, சம்பூரில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாம்கள் மற்றும் அதை ஒட்டிய கட்டைபறிச்சான் மற்றும் தோப்பூர் (துப்பாபுர) பகுதிகளை மீட்பதற்காக இலங்கை இராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. தாக்குதல் தொடர்ந்தால், போர்நிறுத்தம் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வரும் என விடுதலைப் புலிகள் அறிவித்தனர்.

சீரான முன்னேற்றத்துக்குப் பின்னர், பிரிகேட் கமாண்டர் சரத் விஜேசிங்க தலைமையிலான இலங்கை பாதுகாப்புப் படையினர்[5] செப்டம்பர் 4 அன்று சம்பூரை விடுதலைப் புலிகளிடமிருந்து மீண்டும் கைப்பற்றி, அங்கு இராணுவத் தளங்களை நிறுவத் தொடங்கினர்,[6] என புலிகள் ஒப்புக் கொண்டதுடன் தமது போராளிகள் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரத்திலிருந்து வெளியாறியதாகவும் கூறினர்.[7] 2002 ஆம் ஆண்டில் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் ஏற்பட்ட முதல் குறிப்பிடத்தக்க பிராந்திய மாற்றம் இதுவாகும்.[8] இந்த தாக்குதலில் 33 வீரர்களை இழந்ததாக இலங்கை ராணுவம் கூறியது. மேலும் 200க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகள் கொல்லப்பட்டதாகவும் இலங்கை இராணுவம் கூறியது.[5] இராணுவத் தாக்குதலின் விளைவாக 97 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 215 இக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் கூறினர். இந்த தாக்குதல் இலங்கை இராணுவத்தின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று புலிகள் சுட்டிக் காட்டினர்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "The Hindu : International : Fierce battles continue in Jaffna". www.hindu.com. Archived from the original on 12 March 2007. பார்க்கப்பட்ட நாள் 24 October 2022.
  2. Peter Apps (12 September 2006). "Sri Lanka army battles rebels in northeast". Reuters இம் மூலத்தில் இருந்து 3 September 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060903184404/http://today.reuters.co.uk/News/CrisesArticle.aspx?storyId=COL24804. 
  3. 3.0 3.1 Col R Hariharan (retd.) (8 September 2006). "Sri Lanka: LTTE's moment of truth at Sampur - Update 101". South Asai Analysis Group இம் மூலத்தில் இருந்து 6 July 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070706090043/http://www.saag.org//notes4/note331.html. 
  4. 4.0 4.1 4.2 4.3 B. Muralidhar Reddy (5 September 2006). "Sri Lankan army captures Sampur" இம் மூலத்தில் இருந்து 1 October 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071001023247/http://www.hindu.com/2006/09/05/stories/2006090505251300.htm. 
  5. 5.0 5.1 "Fierce battles continue in Jaffna". 12 September 2006. http://www.hindu.com/2006/09/12/stories/2006091204601400.htm. 
  6. "Sri Lanka Army captures Sampur". Bloomberg.com. 4 September 2006. https://www.bloomberg.com/apps/news?pid=20601080&sid=ax6hzULkWuCE. 
  7. "LTTE admits defeat in Sampoor". BBC. 4 September 2006. http://www.bbc.co.uk/sinhala/news/story/2006/09/060904_sampoor_defeat.shtml. 
  8. "Sri Lankan military captures key rebel territory, Tigers vow to keep fighting". International Herald Tribune. 3 September 2006. http://www.iht.com/articles/ap/2006/09/04/asia/AS_GEN_Sri_Lanka.php. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பூர்_சமர்&oldid=4021610" இலிருந்து மீள்விக்கப்பட்டது