சம்மு காசுமீர் மாநில மகளிர் ஆணையம்
சம்மு காசுமீர் மாநில மகளிர் ஆணையம் என்பது சம்மு காசுமீர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்காக 1993ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்ட அமைப்பாகும். சம்மு காசுமீர் அரசால் அம்மாநிலத்தில் பெண்கள் நல ஆணையம் ஒரு பகுதி நீதித்துறை அமைப்பாக அமைக்கப்பட்டது.
ஆணையம் மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1993 |
ஆட்சி எல்லை | சம்மு காசுமீர் அரசு |
தலைமையகம் | பழைய சட்டசபை வளாகம், சிறீநகர்- 190001 (மே-அக்டோபர்) b) பிரகதி பவன், ஜெ. டி. ஏ. வளாகம், முதல் தளம், சம்மு தாவி- 180012.[1] |
வலைத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
வரலாறு மற்றும் குறிக்கோள்கள்
தொகுசம்மு காசுமீர் மாநில மகளிர் ஆணையம், பெண்கள் தொடர்பான குறிப்பிட்ட பிரச்சனைகளை விசாரிப்பதற்காகவும், மாநிலத்தின் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டது.[2] குடும்பம் மற்றும் சமூகத்தில் மகளிர் எதிர்கொள்ளும் எந்தவொரு துன்புறுத்தல் மற்றும் பிரச்சினைகளுக்கு எதிராகப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் இந்த மகளிர் ஆணையம் அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
மாநில ஆணையம் பின்வரும் நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டது:
- பெண்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்தல்.
- சம்பந்தப்பட்ட சட்டங்கள் அல்லது வாய்ப்பு மறுப்பு அல்லது பெண்கள் உரிமைகளைப் பறிக்கும் பட்சத்தில் சரியான நேரத்தில் தலையீடு மூலம் பாலின அடிப்படையிலான பிரச்சினைகளைக் கையாளவும்.
- பெண்கள் சார்ந்த பிரச்சனைகளில் மாநில அரசுக்குப் பரிந்துரை வழங்குதல்
- மாநிலத்தில் பெண்கள் சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆணையம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.
அமைப்பு
தொகுசம்மு காசுமீர் மாநில மகளிர் ஆணையம் தேசிய மகளிர் ஆணையத்தால் உருவாக்கப்பட்டது.[3] மாநில மகளிர் ஆணையத்தின் தலைவரை நியமிப்பதற்கான வழிமுறைகளை மாநிலத்தின் சமூக நலத்துறை உருவாக்குகிறது.[4]
திருமதி நயீமா அகமது மஹ்ஜூர், சம்மு காசுமீர் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்தார்.[5] தலைவர் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.
செயல்பாடுகள்
தொகுசம்மு மற்றும் காசுமீர் மாநில மகளிர் ஆணையம் கீழ்க்கண்ட செயல்பாடுகளைச் செய்ய உருவாக்கப்பட்டது:
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்களின் கீழ் பெண்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ஏற்பாடு மற்றும் பாதுகாப்பு கடைப்பிடிப்பதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.[6]
- மாநிலத்தில் உள்ள எந்தவொரு நிறுவனமும் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறினால், அதை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.[3]
- மாநிலப் பெண்களுக்கு நீதி வழங்குவதில் தவறினால் எந்தச் சட்டத்திலும் திருத்தங்களைப் பரிந்துரை செய்தல்.
- பெண்களின் உரிமைகள் மீறப்படுவது தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி, நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தல்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பெண்களின் உரிமைகள் மீறல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படாதது போன்ற புகார்கள் உள்ள பெண்கள் நேரடியாக மகளிர் ஆணையத்தை அணுகித் தீர்வு காண முடியும்.
- மாநிலத்தில் வன்கொடுமைகள் மற்றும் பாகுபாடுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை மற்றும் உதவி.
- பெண்களின் வெகுஜனக் குழு சம்பந்தப்பட்ட ஏதேனும் பிரச்சினைகளுக்கு வழக்குச் செலவுகளுக்கு நிதியளித்தல் மற்றும் அவர்கள் தொடர்பான அறிக்கைகளை அவ்வப்போது மாநில அரசுக்குச் செய்தல்.
- பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள எந்த வளாகம், சிறை அல்லது பிற தடுப்பு இல்லம் அல்லது வேறு ஏதேனும் வழக்குகளை ஆய்வு செய்து, தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வருதல்.
- ஏதேனும் குறிப்பிட்ட பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை விசாரிக்கவும், ஆய்வு செய்யவும்
- கல்வி ஆராய்ச்சியைத் தொடங்குதல் அல்லது ஊக்குவிப்பு முறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான வழிகளைப் பரிந்துரைக்கவும் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கான காரணங்களைக் கண்டறியவும்.
- பெண்களின் உரிமைகள் அல்லது பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை அல்லது பெண்கள் தொடர்பான எந்தவொரு கொள்கைகளுக்கும் இணங்காதது அல்லது பெண்கள் நலன் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நிவாரணம் தொடர்பான வழிமுறைகளைப் பின்பற்றத் தவறிய எந்தவொரு பிரச்சினையையும் தானாக முன்வந்து அல்லது ஏதேனும் புகார்களை விசாரிக்க.
தொடர்புடைய கட்டுரைகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Jammu and Kashmir State Commission For Women". Jammu and Kashmir State Commission For Women. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
- ↑ Rajagopalan, Swarna (30 May 2016). "Why National and State Women’s Commissions are important and should be held accountable". dnaindia.com. https://www.dnaindia.com/india/report-why-national-and-state-women-s-commissions-are-important-and-should-be-held-accountable-2217939.
- ↑ 3.0 3.1 "NCW creates separate cells for J&K, Ladakh to solve women's issues". indiatoday.in. 5 April 2021. https://www.indiatoday.in/india/story/ncw-creates-separate-cells-for-j-k-ladakh-to-solve-women-issues-in-the-region-1787492-2021-04-05.
- ↑ "Bill on women’s commission adopted". tribuneindia.com. 24 March 1999. https://www.tribuneindia.com/1999/99mar24/j&k.htm.
- ↑ "State Women Commission Chairperson Nayeema Mahjoor Resigns". kashmirage.net. 20 June 2018. https://kashmirage.net/2018/06/20/state-women-commission-chairperson-nayeema-mahjoor-resigns/.
- ↑ "Jammu and Kashmir State Commission For Women". Jammu and Kashmir State Commission For Women. Archived from the original on 12 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)