சரகோசா திறப்பு
சரகோசா திறப்பு (Saragossa Opening) அல்லது எம்பெல் திறப்பு (Hempel's Opening) என்றழைக்கப்படும் சதுரங்கத் திறப்பாட்டம் வெள்ளைக் காய்களுடன் ஆடுபவரின் முதல் நகர்வு,
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நகர்வுகள் | 1.c3 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | A00 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம் | ஒழுங்கற்ற சதுரங்கத் திறப்பு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏனைய சொற்கள் | எம்பெல்லின் திறப்பு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
Chessgames.com opening explorer |
- 1. c3
என்ற நகர்வுடன் ஆரம்பமாகிறது.
வெள்ளை ஆட்டக்காரரின் இந்த நகர்வு ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தாக்கும் மனப்பாங்குடன் ஆடப்படுவதாக தெரிவதால் சதுரங்கத் திறப்புகளின் கலைக்களஞ்சியத்தில் இத்திறப்பு ஒரு முறையற்ற திறப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒழுங்கற்ற இத்திறப்பிற்கு A00 என்ற குறியீட்டையும் அக்கலைக் களஞ்சியம் வழங்கியுள்ளது.
வரலாறு
தொகுஇந்த திறப்பு 1919 ஆம் ஆண்டில் எசுப்பானியாவில் இருந்த சரகோசா சதுரங்கக் கூடலகத்தில் புகழ் பெற்ற ஆட்ட முறையாக இருந்தது. இக்கூடலகத்தின் உறுப்பினர் சோசு சன்கோசா, இரிவிச்டா டெல் கூடலகம், அர்சென்டினோவில் இத்திறப்பை பகுப்பாய்வு செய்தார் [1] . 1922 ஆம் ஆண்டில் மானெய்ம்மில் நடைபெற்ற ஒரு மாதிரிப் போட்டியில் மூன்று சதுரங்க வீரர்களை சரகோசா திறப்பான 1.c3 என்ற நகர்வுடன் ஆட்டத்தைத் துவங்குமாறு கோரப்பட்டது. இக்கோரிக்கைக்காக விளையாடிய சைக்பெர்ட் தாரசு, பால் லியோனார்டு, சாக்குவச் மீசசு ஆகிய மூவரில் தாரசு வெற்றி பெற்றார்.
அடிப்படைகள்
தொகு1.c3 என்ற நகர்வு ஒரு உயர்வேட்கையற்ற நடவடிக்கை போலவும், அரசியின் நகர்வுக்காக ஒரு மூலைவிட்ட வழியைத் திறந்து விடுவதற்கான நகர்த்தலாகவும் மட்டுமே தெரிகிறது. ஆனால் இந்த நகர்வு அரசி போர்க்களத்தின் மையப் பகுதிக்குச் செல்வதற்கு அஞ்சுவது போன்றத் தோற்றத்தை தோற்றுவிக்கிறது. மேலும் d2 கட்டத்தில் இருக்கும் சிப்பாயை அடுத்த நகர்வில் d4 கட்டத்திற்கு நகர்த்தும் நோக்கம் கொண்ட ஒரு முன்னேற்பாடு போலவும் காணப்படுகிறது. ஆனால் பூர்வாங்க முன்னேற்பாட்டு நடவடிக்கை எதுவுமில்லாமலயே வெறுமனே d4 என்றும் ஆடமுடியும். அதுமட்டுமின்றி, போரில் குதிரையை இறக்குவதற்கு மிக அவசியமான c3 கட்டத்தில் சிப்பாயை நிறுத்தி வைப்பது வெள்ளை ஆட்டக்காரருக்கு ஒரு பின்னடைவாகவும் உள்ளது. 1.d4 என்ற நகர்வுக்கும் 1.c3 என்ற நகர்வுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் 1.d4 ஆடுவதால் கருப்பு ஆட்டக்காரர் 1...e5, என்ற நகர்வை ஆடமாட்டார் என்று உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். கூடுதல் எச்சரிக்கையுடன் ஆடப்படும் 1.c3 எனப்படும் சரகோசா நகர்வு கருப்பு ஆட்டக்காரரை 1...e5 என்ற நகர்வை ஆட அனுமதிக்கிறது. ஆனால் முறையற்ற இந்நகர்வின் மூலம் தொடரும் வெள்ளையின் ஒவ்வொரு நகர்வுக்கும் கருப்புக் காய்களுடன் ஆடுபவரை திட்டமிட விடாமல் ’என் நகர்வுக்கு என்னபதில்?’ என்று வலியுறுத்திக் கேட்கும் உத்வேகம் கிடைக்கிறது. இவ்வாறு உண்டாகும் கூடுதல் உத்வேகத்தை வெள்ளை ஆட்டக்காரர் அந்த ஆட்டத்தில் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளவும் சரகோசா அமைப்பு உதவுகிறது.
1.c3 என்ற நகர்வு அப்படியொன்றும் மோசமான நகர்வும் அல்ல என்றும் கருதப்படுகிறது. ஏனெனில், எதிர் காரோ – கான் தற்காப்பு அல்லது சிலாவ் தற்காப்பு போன்ற திட்டவட்டமான திறப்பு முறைகளுக்கு 1.c3 நகர்வை தொடரும் சில நகர்வுகள் மூலமாக நாம் மாற்றிக் கொள்ள இயலும். சரகோசாவில் வெள்ளை ஆட்டக்காரருக்கு சற்றுக் கூடுதல் உத்வேகம் கிடைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 1.c3 e5 2.d4 exd4 3.cxd4 d5 என்ற நகர்வுகளுக்குப் பின்னர் 1.c3 என்ற நகர்வை, அரசியின் பலியாட்டம் நிராகரிப்பு திறப்பின் பரிமாற்ற வகை ஆட்டமாக சதுரங்கப் பெருந் தலைவர்கள் அவ்வப்போது விளையாடினார்கள். மேலும் 1.c3 Nf6 2.d4 அல்லது 1.c3 d5 2.d4 என்று வகைகளில் விளையாடி திட்டவட்டமான ஆனால் முனைப்பற்ற அரசியின் சிப்பாய் ஆட்டம் திறப்பும் ஆடப்பட்டது; அல்லது 1.c3 e5 2.d4 exd4 3.Qxd4!? Nc6 4.Qa4 என்ற நகர்வுகளுக்குப் பின்னர் எதிர் சிகாண்டிநேவிய தற்காப்பு ஆட்டமும் ஆடப்பட்டது; இங்ஙனமே பொன்சியானி மற்றும் மைய்ய ஆட்டம் திறப்பு என்று ஏராளமான திறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆழமான கோட்பாட்டு அறிவு கொண்ட சதுரங்கத் தலைவர்களால் சரகோசா திறப்பின் சில வரிசை அமைப்புகளில் வெள்ளைக் காய்களுடன் விளையாடி அத்திறப்பு தரும் கூடுதல் உத்வேகத்தையும் அதனால் விளையும் எதிர்பாராத சில முன்னேற்றங்களையும் திறமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சரகோசா திறப்பிற்கு எதிராக விளையாட கருப்பு ஆட்டக்காரருக்கு மிகவும் பொதுவான மற்றும் பயனுள்ள 1...d5, 1...e5, மற்றும் 1...Nf6 போன்ற திறப்பு நகர்வு வாய்ப்புகள் காணப்படுகின்றன. கருப்பு ஆட்டக்காரர் 1...d5 என்று விளையாடும்போது வெள்ளை ஆட்டக்காரர் ஒருவேளை 2.e4?! என்று விளையாடினால் 2...dxe4, 3.Qa4+ என ஆட்டம் தொடர்ந்து வெள்ளை ஆட்டக்காரர் இழந்த சிப்பாயைக் கைப்பற்றுவார். ஆனால் கருப்பு 3...Nc6 4.Qxe4 Nf6 5.Qc2 e5. என்ற நகர்வுகள் வழியாக விரைவாக ஆட்டத்தில் நுழைந்து விடமுடியும். சரகோசாவிற்கு எதிராக கருப்பு 1...f5 என்றும் விளையாடலாம். வெள்ளை தன்னுடைய அடுத்த நகர்வை 2.d4 என்று ஆடினால் அந்த ஆட்டம் டச்சு தற்காப்பு வகை திறப்பாட்டமாக மாறிவிடும்.
சரகோசாவிற்கு எதிராக கருப்பு 1 ... c5 என்றும் கூட ஆடலாம், ஆனால், திட்டவட்டமான பிறதிறப்பு நகர்வுகளுக்கு ஆட்டத்தை மாற்றிக்கொள்ள வெள்ளை ஆட்டக்காரருக்கு இந்நகர்வு வாய்ப்பளிக்கிறது. 1...c5 நகர்வுக்கு எதிராக வெள்ளை 2.e4 என்று விளையாடி சிசிலியன் தற்காப்பு திறப்பாட்டம் அலாப்பின் வகைக்கு ஆட்டத்தை மாற்றிக் கொள்வார். 1...c5 2.d4 என்ற வரிசை முறையில் விளையாடவும் வெள்ளைக்கு வாய்ப்பு உண்டு. 2...cxd4 3.cxd4 d5 என்று ஆட்டம் தொடர்ந்து வழக்கமான சிலாவ் தற்காப்பு திறப்பாட்டத்தின் பரிமாற்ற வகை ஆட்டமும் 2...cxd4 (2...e6 3.e4 d5 4.e5 அல்லது 4.exd5 என்று விளையாடுவதன் மூலம் பிரெஞ்சு தற்காப்பு திறப்பாட்டமாகவும் ஆட்டம் மாற்றம் பெற்றுவிடும். வழக்கமாக 1.d4 d5 2.c4 c6 3.cxd5 cxd5 என்ற நகர்வுகளால் பிரெஞ்சு தற்காப்பு ஆட்டம் மேற்கண்ட நிலையை அடையும். இந்நிலை வெள்ளை ஆட்டக்காரருக்கு சற்று அனுகூலத்தை அளிக்கும்.
சரகோசாவிற்கு எதிராக கருப்பு ஆட்டக்காரர் 1...Nc6 என்ற நகர்வை ஆடவும் சாத்தியம் உண்டு. இது ஆட்டத்தை 1.Nc3 திட்ட திறப்பாட்டத்திற்கு (எதிர் நிறங்கள்) கொண்டு செல்லும். இதன் தொடர்ச்சியாக 2.d4 d5 என்ற நகர்வுகளுக்குப் பின்னர் வெள்ளையின் அசாதாரண திறப்பை குறிப்பிட்ட சிக்கல்கள் எதுவும் இல்லாமல் எதிர்கொள்ளத் தயாராக இருப்பது போல் கருப்பு ஆட்டக்காரர் விளையாடுவது தெரிகிறது.
குறிப்புகள்
தொகு- ↑ Hooper & Whyld 1992, ப. 354
மேற்கோள்கள்
தொகு- Hooper, David; Whyld, Kenneth (1992), The Oxford Companion to Chess (2 ed.), Oxford University Press, p. 354, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280049-3
- Dunnington, Angus (2000). Winning Unorthodox Openings. Everyman Chess. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85744-285-4.
- Eric Schiller (2002). Unorthodox Chess Openings (Second ed.). Cardoza. p. 329. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58042-072-9.