சரக்கி ஏரி (Sarakki lake) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் பெங்களூரு தெற்குப் பகுதியில், ஜே. பி. நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஓர் ஏரியாகும். இது பெங்களூரில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரி புட்டெனகள்ளி பிரதான சாலையில் அமைந்துள்ளது. சரக்கி என்பது "ஆயிரம் பறவைகள்" என்று மொழிபெயர்க்கப்பட்ட சாவிரா கக்கி என்ற கன்னட மொழி சொற்களின் இணைப்பாகும்.[1]

சரக்கி ஏரி
இரவுக் காட்சி
அமைவிடம்பெங்களூர், கருநாடகம், இந்தியா
ஆள்கூறுகள்12°53′54″N 77°34′40″E / 12.89833°N 77.57778°E / 12.89833; 77.57778
வடிநில நாடுகள்India
மேற்பரப்பளவு84 ஏக்கர்கள் (34 ha)
குடியேற்றங்கள்பெங்களூர்
சரக்கி ஏரியும் அருகிலுள்ள பகுதிகளும்

இந்த ஏரி முன்பு 84 ஏக்கர் (34 ஏக்கர்) பரப்பளவைக் கொண்டிருந்தது. இதில் 14 எக்டேர் 2013ஆம் ஆண்டு நிலவரப்படி தனியார் கட்டட நிறுவனத்தினர் மற்றும் பிற நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. பெங்களூர் தெற்கு வட்டாட்சியர் நடத்திய கணக்கெடுப்பின்படி, ஏரிப் பகுதியில் 135 ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்துள்ளன. இதைத் தொடர்ந்து கருநாடக உயர் நீதிமன்றம், நீர் உரிமைக்கான மக்கள் பிரச்சாரம் தாக்கல் செய்த வழக்கில், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை அகற்ற ஆகத்து 2014-இல் உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பாளர்களுக்குக் கடிதம் அனுப்பிய பின்னர் ஏப்ரல் 2015-இல் 10 நாள் வெளியேற்ற நடவடிக்கை தொடங்கியது.[2] மீட்டெடுக்கப்பட்ட நிலம் ₹2,000 கோடி (240 அமெரிக்க டாலர்) என மதிப்பிடப்பட்டுள்ளது.[3]

2012ஆம் ஆண்டில், ஏரியைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள சரக்கி ஏரி மேம்பாட்டு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sarakki Lake judgment on Feb 17: Will the lake see a thousand birds again?". Citizen Matters. Sarakki Lake Area Improvement Trust. bangalore.citizenmatters.in. 30 January 2014. பார்க்கப்பட்ட நாள் 21 April 2015.{{cite web}}: CS1 maint: others (link)
  2. Bharadwaj, Aditya K. V. (16 April 2015). "Bengaluru's largest encroachment eviction drive begins at Sarakki Lake". The Hindu. http://www.thehindu.com/news/cities/bangalore/bengalurus-largest-encroachment-eviction-drive-begins-at-sarakki-lake/article7108731.ece. 
  3. Bharadwaj, Aditya K. V. (17 April 2015). "Land worth Rs. 2,000 cr. being recovered in city". The Hindu. http://www.thehindu.com/news/cities/bangalore/land-worth-rs-2000-cr-being-recovered-in-city/article7112883.ece. 
  4. Rao R., Sunitha (10 August 2018). "Senior citizens to the rescue of Sarakki lake". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 9 September 2018.
  5. Desai, Priya (20 June 2012). "TBI Citizen Initiative: Puttenahalli Lake And Sarakki Lake In Bangalore - Infused With New Life". The Better India. Archived from the original on 25 June 2012. பார்க்கப்பட்ட நாள் 9 September 2018.

மேலும் காண்க

தொகு
  • பெங்களூரில் உள்ள ஏரிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரக்கி_ஏரி&oldid=4060388" இலிருந்து மீள்விக்கப்பட்டது