சரள மாறி ( கணிதம்)

சரள மாறி என்பது கால மாற்றத்தின் அளவு அல்லது மாறி ஆகும்.[1] நுண்கணிதத்தில் சாா்புகளை உருவாக்கும் போது ஐசக் நியூட்டனால் இந்த வாா்த்தை முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.[2] இந்த கருத்தை 1665 இல் நியூட்டன் தனது நிலையற்ற முறைகள் என்ற கணித ஆய்வுக் கட்டுரையில் அறிமுகப்படுத்தினாா். [3] எந்த மாறி தன்னுடைய மதிப்பினை சரளமாக மாற்றுகிறதோ அதனை சரள மாறி என நியூட்டன் வரையறுத்தாா் – எடுத்துக்காட்டாக , காற்றில் எறியப்படும் பந்தின் திசைவேகம். சரள மாறியின் வகைக்கெழுவினை நிலையற்ற மாறி என்கிறோம். இது நுண்கணிதத்தில்  நியூட்டனின் முக்கிய கவனம் ஆகும்.தொகையிடுதலின் மூலமாக ஒரு சரள மாறி அதனுடைய நிலையற்ற மாறியிலிருந்துப் பெறப்படுகிறது.[4]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Newton, Sir Isaac (1736) (in en). The Method of Fluxions and Infinite Series: With Its Application to the Geometry of Curve-lines. Henry Woodfall; and sold by John Nourse. https://books.google.com/books?id=WyQOAAAAQAAJ. பார்த்த நாள்: 6 March 2017. 
  2. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் சரள மாறி ( கணிதம்)
  3. Weisstein, Eric W. "Fluent".
  4. "Isaac Newton (1642-1727)". பார்க்கப்பட்ட நாள் 6 March 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரள_மாறி_(_கணிதம்)&oldid=2748890" இலிருந்து மீள்விக்கப்பட்டது