சரஸ்வதி நதி (வங்காளம்)

சரஸ்வதி நதி (Saraswati River - Bengal) (வங்காள மொழி: সরস্বতী নদী) வங்காளத்தில் 16 ஆம் நூற்றாண்டு வரை செயலில் இருந்த ஒரு கிளை ஆறு ஆகும். இது பாகீரதி நதியின் கிளை ஆறாக இருந்தது. தற்போது இந்த நதி அங்கு இல்லை. [1] வங்காளத்தில் நதியோர துறைமுக நகரங்களின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியில் சரஸ்வதியின் போக்கும் நிலையும் முக்கிய பங்கு வகித்துள்ளன. ஆரம்பத்தில், முக்கியமான துறைமுக நகரம் தாம்ரலிப்தா ஆகும். அதன் சரிவுக்குப் பிறகு, சப்தாகிராம் வளர்ச்சி அடைந்து பின்னர் வீழ்ச்சி அடைந்தது. இறுதியாக இப்படிப்பட்ட ஒரு நதியோர துறைமுக நகராக கொல்கத்தா வந்தது.

வான் டென் ப்ரூக்கின் வரைபடம் 1660

முந்தைய போக்கு

தொகு
 
திரிவேணியில் ஹூக்லி நதியிலிருந்து சரஸ்வதி நதியின் தொடக்கப் புள்ளி

இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் ஹூக்லி மாவட்டத்தில் பண்டேலுக்கு அருகிலுள்ள திரிவேணியில், பாகீரதி மூன்று நீரோடைகளாக கிளைத்தது. சரஸ்வதி சப்தகிராமிற்கு அப்பால் தென்மேற்கே பாய்ந்து, ஜமுனா (இது வட இந்தியாவில் இதே பெயரில் உள்ள நதியிலிருந்து வேறுபட்டது மற்றும் கிழக்கு வங்கத்தில் இதே பெயரில் பல நீரோடைகள் உள்ளன) என்ற பெயரில் தென்கிழக்கில் பாய்ந்தது, இன்றைய நகரத்தின் வடக்கு எல்லையைத் தாண்டி கல்யாணி மற்றும் பாகீரதி நதிகளின் முறையான போக்கில் தற்போதைய ஹூக்லி கால்வாய் வழியாக கொல்கத்தாவுக்கும் பின்னர் ஆதி கங்கை வழியாகவும், காளிகாட்டைக் கடந்தும் கடலுக்குச் செல்கிறது. சரஸ்வதி இன்றைய தம்லக் நகருக்கருகேயான முகத்துவாரத்தின் வழியாக ஓடியதாக நம்பப்படுகிறது. இந்த ஆறு ரூப்நாராயண் மற்றும் தாமோதர் ஆகியவற்றிலிருந்து மட்டும் நீரைப் பெற்றிருக்கவில்லை. அவை மட்டுமல்லாமல் பல சிறிய நீரோடைகளிலிருந்தும் நீர் வரத்தைப் பெற்றிருந்தது. கி.பி 8 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, சரஸ்வதியின் தோற்றுவாயில் தாம்ரலிப்தா அதிக வண்டலை உமிழ்ந்ததன் காரணமாகவும், அதன் போக்கை மாற்றிக்கொண்டதன் காரணமாகவும் அதன் முக்கியத்துவத்தை இழந்தது.

 
சரஸ்வதி நதி 2012 ல் அண்டுல் வழியாக செல்கிறது. ஆற்றின் இடது புறத்தில் பிரபு ஜெகத்பந்து கல்லூரி காணப்படுகிறது.

சரஸ்வதி நதி கடலுக்கு ஒரு தனித்தன்மை வாய்ந்த போக்கைக் கொண்டிருந்தது என்று நம்பப்படுகிறது.

 
ஹூக்லியில் திரிவேணிக்கு அருகே பாகீரதி நதியுடன் சரஸ்வதி நதியின் சந்திப்பு இடம்.

[2] [3]

நதியின் போக்கில் மாற்றம்

தொகு
 
சரஸ்வதி நதி ஹவுராவின் சங்ரெய்ல் என்னும் இடத்தில் ஹூக்லி நதியுடன் இணைகிறது.

16 ஆம் நூற்றாண்டில், முன்பு சரஸ்வதி வழியாகப் பாய்ந்து கொண்டிருந்த பாகீரதியின் முதன்மையான நீர்ப்போக்கு, ஹூக்லி கால்வாய் வழியாகப் பாயத் தொடங்கியது. காலப்போக்கில், மேல் சரஸ்வதி வறண்டது. ஆனால், பாகீரதி அல்லது ஹூக்ளி பழைய ஆதி கங்கா கால்வாயைக் கைவிட்டு சங்ரெயிலுக்குக் கீழே சரஸ்வதியின் கீழ்பகுதியில் வழியாக பாய்கிறது வருகிறது.[4]

வரலாறு

தொகு

1660 ஆம் ஆண்டின் வான் டென் ப்ரூக்கின் வரைபடத்தில் ஆற்றின் தெளிவான அறிகுறி உள்ளது. வான்டென் ப்ரூக்கின் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக, பெங்காலி கவிஞர் பிப்ரதாஸ் பிபிள்ளை மானசமங்கல் என்ற தனது படைப்பில் இந்த ஆறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பற்றிய ஒரு குறிப்பினைக் கொடுத்துள்ளார். வர்த்தகர் சந்த் சதகரின் வணிகக் கப்பல் கடலுக்குச் செல்லும்போது, அவர் திரிவேணி மற்றும் சப்தகிராம் வழியாகவும், கங்கை, சரஸ்வதி மற்றும் யமுனாவின் முக்கூடல் வழியாகவும் சென்றார்.[5] என்று பிப்ரதாஸ் எழுதியுள்ளார்:

குறிப்புகள்

தொகு
  1. Majumdar, Dr. R.C., History of Ancient Bengal, First published 1971, Reprint 2005, pp. 2-3, Tulshi Prakashani, Kolkata, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89118-01-3.
  2. Ray, Aniruddha (2012). "Satgaon". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  3. Roy, Niharranjan, Bangalir Itihas, Adi Parba, (in வங்காள மொழி), first published 1972, reprint 2005, p. 126, Dey’s Publishing, 13 Bankim Chatterjee Street, Kolkata, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7079-270-3
  4. Ghosh, S.(2011), ‘Protecting Natural Resources: Course of a River Movement’, Community Development Journal, Vol. 46 (4),pp. 542-557. DOI: 10.1093/cdj/bsq007
  5. Roy, Niharranjan, p. 75
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரஸ்வதி_நதி_(வங்காளம்)&oldid=3968241" இலிருந்து மீள்விக்கப்பட்டது