தாம்ரலிப்தா

தாம்ரலிப்தா என்பது பழங்கால ஒடிய அரசின் எல்லைக்குள் இருந்த துறைமுக நகரம் ஆகும். இது தற்காலத்தைய மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான தம்லக் எனுமிடத்தில் இருந்ததாகவும், தாம்ரலிப்தா என்ற பெயரில் இருந்தே தம்லக் என்ற பெயர் வந்திருக்கக் கூடும் என்றும் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

வங்காள விரிகுடாவின் கடற்கரையில் தாம்ரலிப்தாவின் அமைவிடம், கிபி 375

இந்த துறைமுக நகரத்தின் வழியாக தெற்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும் வாணிபம் நடைபெற்றது.[1]இது ரூப்நாராயணா ஆற்றின் கரையில் அமைந்திருந்து. மகாபாரதத்தில் இந்த இடத்தைப் பற்றிய குறிப்புகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இந்த இடத்தில் புத்த விகாரங்கள் இருந்ததாக சீனப் பயணிகளான பாசியான், சுவான்சாங் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.[2] [3]

சான்றுகள் தொகு

  1. "Purba (East) Medinipur". கல்கத்தா உயர் நீதிமன்றம். Archived from the original on 17 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 19 November 2011.
  2. Shankar Chattopadhay, Suhrid (22 February 2013). "Unearthing a culture". Frontline. http://www.frontline.in/arts-and-culture/heritage/unearthing-a-culture/article4372313.ece. பார்த்த நாள்: 2 November 2013. 
  3. Ports of Ancient Odisha - Odisha Review - Odissa Government

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்ரலிப்தா&oldid=3557656" இலிருந்து மீள்விக்கப்பட்டது