சரஸ்வதி ரானே

இந்திய பாடகி

சரஸ்வதி ரானே (அக்டோபர் 4, 1913 - அக்டோபர் 10, 2006) கிரானா கரானா இசை வடிவத்தை தோற்றுவித்த உஸ்தாத் அப்துல் கரீம் கானின் (1872-1937) மகளான இவர் இந்துஸ்தானி இசை வகையில் இந்திய பாரம்பரிய பாடகர் ஆவார். இவரது குடும்பம் நீண்ட மற்றும் சிறந்த இசை பாரம்பரியம் கொண்டது. இவர் கிரானா கரானா இசை பாணியின் குரல் இசை ஆரம்ப பயிற்சியை அவரது மூத்த சகோதரர் சுரேஷ்பாபு மானே மற்றும் மூத்த சகோதரி கிராபாய் பரோடேகர் ஆகியோரிடமிருந்து பெற்றார் . [1] பின்னர் இவர் குறிப்பாக ஜுகல்பாண்டி பாணியில், மூத்த சகோதரியான கிராபாய் பரோடேகருடன் இணைந்து பாடினார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பயிற்சி

தொகு

அக்டோபர் 4, 1913 இல் கிரானா கரானாவினை தோற்றுவித்த உஸ்தாத் அப்துல் கரீம் கான் (1872-1937) மற்றும் தாராபாய் மானே ஆகியோருக்கு சாகினாவாக இசைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். கணவரிடமிருந்து பிரிந்த பிறகு, இவரது தாயார் தாராபாய், தனது ஐந்து குழந்தைகளுக்கும் மறுபெயரிட்டார். எனவே சாகினா குமாரி சரஸ்வதி மானே ஆனார். இவரது சகோதரர் சுரேஷ்பாபு மானே மூலம் இசை பயில தொடங்கினார். பின்னர் 1930 க்குப் பிறகு, இவர் தனது சகோதரி கிராபாய் பரோடேகரிடமிருந்தும் கற்கத் தொடங்கினார்.

இவரது இசை அறிவை மேம்படுத்துவதற்காக, அல்லாடியா கானின் மருமகன், ஜெய்ப்பூர் கரானாவின் உஸ்தாத் நாதன் கான், பேராசிரியர் பி. ஆர். தியோதர் மற்றும் குவாலியர் கரானாவின் பண்டிட் மாஸ்டர் கிருஷ்ணாராவ் ஃபுலாம்பிரிகர் போன்ற பல்வேறு கரான்களின் உஸ்தாத்களிலிருந்தும் அவருக்கு டேலீம் (பயிற்சி) கிடைத்தது.[2]

தொழில்

தொகு

சரஸ்வதிபாய் தனது இசை வாழ்க்கையை ஏழு வயதிலேயே சங்கீத் செளபத்ரா, சங்கீத் சன்ஷய்கல்லோல், சங்கீத் ஏகாச் பியாலா போன்ற இசை நாடகங்களில் மேடை நடிப்பால் தொடங்கினார். சிறு வயதிலிருந்தே, அதாவது, 1929 முதல், இவர் பால்கந்தர்வா போன்ற சிறந்த கலைஞர்களுடன் முக்கிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

1933 ஆம் ஆண்டில், இவர் அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சியைத் தொடங்கி, பொது நிகழ்ச்சிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்த 1990 ஆம் ஆண்டு வரை அகில இந்திய வானொலியில் ஒரு சிறந்த கலைஞராக தொடர்ந்தார். 1940 களின் முற்பகுதியிலிருந்து 1980 களின் நடுப்பகுதி வரை கன்னியாகுமரி முதல் பெஷாவர் வரை (இப்போது பாகிஸ்தானில்) பல வானொலி சங்க சபைகளில் பங்கேற்ற சில பாரம்பரிய பாடகர்களில் இவரும் ஒருவர்.

இந்தி மற்றும் மராத்தி திரையுலக படங்களுக்கு பின்னணி பாடிய முதல் பெண் கலைஞர்களில் இவரும் ஒருவர். ஆச்சார்யா ஆத்ரே இயக்கிய மராத்தி படமான பயாச்சி தாசி படத்தில் இவரது முதல் பின்னணி பதிவு இருந்தது. இவர் 1954 வரை இந்த துறையில் இருந்தார். ராம்ராஜ்யா என்ற இந்தி திரைப்படத்தில் இவரது பாடல் 'பினா மதுர் மதுர் கச்சு போல் ' இந்தியா முழுவதும் பிரபலமடைந்து உச்சத்தை எட்டியது. அந்த காலங்களில் அதிக அளவில் கிராம்ஃபோன் பதிவுகளை விற்றதற்காக அவருக்கு எச்.எம்.வி விருது வழங்கப்பட்டது.

பிரபல இயக்குனர் சியாம் பெனகல் இயக்கிய சர்காம் (1950), மற்றும் பூமிகா (1977) ஆகிய திரைப்படங்களுக்கும் இவர் பின்னணி பாடல் வழங்கினார்.

சி.ராம்சந்திரா, சங்கர்ராவ் வியாஸ், கே.சி டே, மற்றும் சுதிர் பாட்கே போன்ற சிறந்த இசை இயக்குனர்களின் இசையமைப்பில் பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

குறிப்புகள்

தொகு
  1. "Kirana Gharana". Archived from the original on 2011-01-28. பார்க்கப்பட்ட நாள் 2020-03-25.
  2. Misra, Susheela. Among contemporary musicians.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரஸ்வதி_ரானே&oldid=3553123" இலிருந்து மீள்விக்கப்பட்டது