சரீரக உபநிடதம்

இந்து சமய பண்டைய நூல்

சரீரக உபநிடதம் ( Sariraka Upanishad என்பது உபநிடதங்களில் சிறியதாகும். மேலும் இது இராமனால் அனுமனுக்கு உபதேசித்த முக்திகா உபநிடங்களில் 62 இல் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]) இது சமசுகிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது.[2] [3] யசுர்வேதத்தைச் சேர்ந்த 32 உபநிடதங்களில் ஒன்றான இது சாமான்யம் (பொது), [4] என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பல மாய உடலியல் உபநிடதங்களில் இதுவும் ஒன்றாகும்.[5][6]

சரீரக உபநிடதம்
உடல் மற்றும் அதன் அமைப்புகள்
தேவநாகரிशरीरक or शारीरक
உபநிடத வகைசாமான்யம்
தொடர்பான வேதம்யசுர் வேதம்

மனித உடலுக்கும் மனித ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பு என்ன, ஒருவர் மற்றவருடன் எங்கே, எப்படி தொடர்பு கொள்கிறார், பிறப்பு மற்றும் இறப்புக்குப் பிறகு ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கிறது என்பதை கர்ப்ப உபநிடதத்துடன் சேர்த்து இது கவனம் செலுத்துகிறது. [7] இந்தக் கேள்விகள் மற்றும் பல்வேறு கோட்பாடுகள் இந்து மதத்தின் ஆரம்பகால உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கோட்பாடுகள் உருவாகின்றன. ஆனால் சரீரகம் மற்றும் பிற மாய உடலியல் உபநிடதங்கள் இந்த விவாதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. [7] ஜெர்மனியைச் சேர்ந்த இந்தியவியலாளர் பால் தியூசென் பிற்காலத்தில் நூல்கள் திருத்தப்பட்டதாகவும், அவற்றின் சிதைந்த உள்ளடக்கம் அறியப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் முழுவதும் சீரற்றதாகவும் உள்ளது[7] என்றும் கூறுகிறார்.

மனித உடல் என்பது பூமி, நீர், காற்று, விண்வெளி மற்றும் ஆற்றல் ( நெருப்பு) ஆகியவற்றின் கலவையாகும் என்று உரை வலியுறுத்துகிறது. மேலும் ஜீவாத்மா , பரமாத்மா. இவற்றிலிருந்து மனித உணர்வு உறுப்புகள் எவ்வாறு உருவாகின்றன என்றும், மனிதனின் விருப்பம், சந்தேகம், நினைவாற்றல், புத்தி, பேச்சு, கோபம், பயம், மாயை, நன்னடத்தை, இரக்கம், அடக்கம், அகிம்சை, தர்மம் மற்றும் பிற அம்சங்கள் போன்ற வாழ்க்கையின் பிற செயல்பாடுகளை விவரிக்கிறது. [5] பிரகிருதி (எப்போதும் மாறும் இயல்பு) எட்டு பூர்வீக வடிவங்கள், பதினைந்து செயல்பாட்டு மாற்றங்கள், மொத்தம் இருபத்து மூன்று தத்துவங்களைக் கொண்டுள்ளது. [5]

சொற்பிறப்பியல்

தொகு

சரீரகம் என்ற வார்த்தையின் அர்த்தம் "உடல் மற்றும் அதன் பாகங்களின் அமைப்புடன் தொடர்புடையது". மேலும், "உடல் மற்றும் ஆன்மா பற்றிய கோட்பாடு" என்பதாகும். [8] இந்த உரை சரீரகோபநிடதம் என்றும் அழைக்கப்படுகிறது.

கட்டமைப்பு

தொகு

உரை ஒரே ஒரு அத்தியாயத்தைக் கொண்டுள்ள. இது மனித உடலியல் கோட்பாட்டை முன்வைக்கும் நீண்ட உரைநடை முன்னுரையுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து எட்டு வசனங்கள் இடம் பெற்றுள்ளன. [9] வசனங்கள் 1 முதல் 4, அதே போல் 6 முதல் 7தாகவும் உள்ளது. மேலும், குணங்கள் மற்றும் நான்கு உணர்வு நிலைகளின் கோட்பாட்டை முன்வைக்கிறது. [9] கடைசி வசனம் புருசனே உயர்ந்தவன் என்று கூறுகிறது.

சான்றுகள்

தொகு
  1. Deussen, Bedekar & Palsule (tr.) 1997, ப. 556.
  2. Ramamoorthy & Nome 2000.
  3. "Śārīraka-Upanishaḍ of Kṛshṇa-Yajurveḍa". Sacred Texts.com. பார்க்கப்பட்ட நாள் 24 October 2015.
  4. Tinoco 1997, ப. 87.
  5. 5.0 5.1 5.2 KN Aiyar, Thirty Minor Upanishads, University of Toronto Archives, இணையக் கணினி நூலக மையம் 248723242, pages vii, 113–115 Archive
  6. Alex Wayman (1982), Reviewed Work: Thirty Minor Upanishads, including the Yoga Upanishads by K. Narayansvami Aiyar, Philosophy East and West, Vol. 32, No. 3, pages 360–362
  7. 7.0 7.1 7.2 Paul Deussen (1966), The Philosophy of the Upanishads, Dover, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0486216164, pages 283–296
  8. śārīraka and śārīra, Sanskrit-English Dictionary, Koeln University, Germany
  9. 9.0 9.1 ॥ शारीरकोपनिषत् ॥ Sanskrit text of Shariraka Upanishad, SanskritDocuments Archives (2009)

உசாத்துணை

தொகு

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரீரக_உபநிடதம்&oldid=3650106" இலிருந்து மீள்விக்கப்பட்டது