சர்வதேச இந்திய திரைப்படக் கலைக்கழக விருதுகள்

ஐ.ஐ.எஃப்.ஏ (IIFA) என்று பிரபலமாக அழைக்கப்படும் சர்வதேச இந்திய திரைப்படக் கலைக்கழக விருதுகள் (International Indian Film Academy Awards) என்பது இந்தி சினிமாவுக்கான வருடாந்திர விருது வழங்கும் விழாவாகும். விஸ்கிராஃப்ட் இன்டர்நேஷனல் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் (Wizcraft International Entertainment Private Limited) தயாரித்த இந்த விருதுகளின் வெற்றியாளர்கள் இரசிகர்களால் தீர்மானிக்கப்படுகிறார்கள், அவர்கள் இந்திய இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்கு இணையவழி நிகழ்நிலை (Online) வாயிலாக வாக்களிக்கிறார்கள். 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது.

சர்வதேச இந்திய திரைப்படக் கலைக்கழக விருதுகள்
நாடுஇந்தியா
வழங்குபவர்சர்வதேச இந்திய திரைப்படக் கலைக்கழக விருதுகள்
முதலில் வழங்கப்பட்டது2000
கடைசியாக வழங்கப்பட்டது2024
இணையதளம்iifa.com
Television/radio coverage
நெட்வொர்க்சோனி என்டெர்டயின்மெண்ட் தொலைக்காட்சி (Sony Entertainment Television|Sony TV,(2000–04)
ஸ்டார் பிளஸ் (STAR Plus) (2005–14)
கலர்ஸ் தொலைக்காட்சி (Colors TV)(2015–23)
ஸீ தொலைக்காட்சி (Zee TV) (2024–)
தயாரிப்பாளர்விஸ்கிராஃப்ட் இன்டர்நேஷனல் (Wizcraft International)

ஐ.ஐ.எஃப்.ஏ திருவிழா (IIFA Utsavam) என்பது வருடாந்திர ஐ.ஐ.எஃப்.ஏ விருதுகளின் தென்னிந்திய பிரிவாகும். 2015 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களை மையமாக வைத்து 2016 இல் விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. முதல் ஐ.ஐ.எஃப்.ஏ திருவிழா இந்தியாவின் ஹைதராபாத் உள்ள காந்தி மோகன சந்திர பாலயோகி தடகள அரங்கத்தில் 24 மற்றும் 25 ஜனவரி 2016 அன்று நடைபெற்றது.[1]

முதன்முறையாக விருதுகள் 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் லண்டனில் உள்ள தி மில்லினியம் டோமில் வழங்கப்பட்டன. அதன் பிறகு, இந்தி சினிமாவின் சர்வதேச வெற்றியைக் குறிக்கும் வகையில் உலகெங்கிலும் உள்ள இடங்களில் விருதுகள் வழங்கப்படுகின்றன. 2000 ஆம் ஆண்டு முதல், இந்த நிகழ்வு ஒரு இரவு நிகழ்விலிருந்து மூன்று நாள் கொண்டாட்டமாக விரிவடைந்து, இந்திய திரைப்படத் துறை தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை நடத்துகிறது.[2]

இந்த விருதுகள் முந்தைய ஆண்டின் படங்களை கௌரவிக்கின்றன. சல்மான் கான் 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து ஐ. ஐ. எஃப். ஏ-வின் விளம்பரத் தூதராக இருந்து வருகிறார், ஐந்து சிறப்பு விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தசாப்தத்தின் நட்சத்திரம் (ஆண் மற்றும் பெண்) (Star of the Decade (Male and Female), தசாப்தத்தின் இயக்குனர் (Director of the Decade), தசாப்தத்தின் திரைப்படம் (Movie of the Decade) , தசாப்தத்தின் இசை {Music of the Decade) மற்றும் தசாப்தத்தின் இயக்குனர் (Director of the Decade) ஆகியனவாகும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "IIFA Utsavam 2016: Baahubali and Thani Oruvan win maximum number of awards".
  2. "IIFA AWARDS 2012 Singapore Watch Online". BoloIndia. Archived from the original on 16 January 2013. பார்க்கப்பட்ட நாள் 20 July 2012.
  3. "Golden Decade Honours to be given at IIFA 2009". Thaindian.com. 24 May 2009. Archived from the original on 22 February 2014. பார்க்கப்பட்ட நாள் 26 June 2011.

விழாக்களின் பட்டியல்

தொகு

2000 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து சர்வதேச இந்திய திரைப்படக் கலைக்கழக விருதுகள் வழங்கும் விழாக்களின் பட்டியல் பின்வருமாறு.