சர்வோதய மறுமலர்ச்சி

இந்தியாவில் கிராம மக்களுக்கு குடிநீர், சுகாதாரம், மருத்துவம் மற்றும் கல்வி அனைத்து அடிப்படை வசதிகளை கிராம அமைப்பு குழு அமைத்து ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என காந்தி அடிகள் விரும்பினார். சர்வோதய கொள்கைகள் வெறும் புத்தக வடிவில் இருப்பதால் அக்கொள்கைகளை அகிலம் முழுவதும் விதைப்பதற்காக ஈரோடு மாவட்டம், காவிலிபாளையத்தில் சர்வோதய மறுமலர்ச்சி இயக்கம் 10 டிசம்பர் 2017 நிறுவப்பட்டது.[1],[2],[3] கிராம சுயாட்சி மற்றும் அதிகாரப்பரவலாக்கம் போன்ற சர்வோதயக்கொள்கைகளை தீர்மானங்களாக முன்மொழியப்பட்டு அக்கொள்கைகளை இந்தியகிராமங்கள் அனைத்துக்கும் எடுத்துச்செல்வதற்கான தளம் அமைக்கப்பட்டது [4],[5],[6]. இதன் நோக்கம் இன்றைய அரசியல் சூழலில் ஒரு முழுமையான மாற்றத்தை இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவிலும் கொண்டுவருவதாகும். இன்றைய அரசியல்வாதிகள் , அரசியல் கட்சிகளின் தார்மீகமற்ற தன்மை பொதுமக்கள் இடையே நம்பகத்தன்மையை குறைத்துவிட்டது.

இன்றைய இந்திய அரசியல் மேற்கத்திய காலனி அரசின் அரசியல் அமைப்பை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

சர்வோதய மறுமலர்ச்சியின் தத்துவங்கள்

தொகு

கிராம சுய ஆட்சி

தொகு

இதன் மூலம் அனைத்து அதிகாரங்களும் கிராம அமைப்புகளுக்கே அளிக்கப்படும். மக்கள் தங்களின் ஒவ்வொரு தேவைகளும் உள்ளுர் கிராம சபை மூலமே நிறைவேறும். நில பட்டா சிட்டா மாறுதல், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் போன்றவை கிராம சபையே நேரடியாக மக்களுக்கு அளிக்கும் அதிகாரம் அமைய வேண்டும். ஏரி, குளம் போன்றவைகள் நேரடியாக கிராம சபையின் முழு அதிகாரத்துக்குள் வரவேண்டும். இவ்விதமாக மக்கள் ஒவ்வொரு தேவைக்கும் நடுவண் அரசுகளை நோக்கி பயணிப்பது குறைக்கப்படும்.

அதிகார பங்கீடு

தொகு

நிர்வாக நலனுக்காக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் தனித்தனி நிர்வாக மண்டலங்களாக உருவாக்கப்பட வேண்டும். சென்னையில் உள்ள பெரும்பாலான அதிகாரங்கள் மண்டலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். மாவட்டங்களில் உள்ள அதிகாரங்கள் தாலுகாவிற்கும், தாலுகாவில் உள்ள அதிகாரங்கள் கிராம சபைகளுக்கும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதிகாரம் நடுவண் அரசிடமிருந்து கிராம மக்களை அடைவதற்கு பதிலாக கிராமங்களில் இருந்து மத்திய நிர்வாகத்தை அடைவதாக இருக்க வேண்டும்[7].

கட்சிகளற்ற குடியரசு

தொகு

இத்தத்துவம் இந்திய அரசியலில் ஒரு மிக பெரிய மாற்றத்தை கொண்டு வரும். உண்மையில் இது மகாத்மா காந்தியின் லட்சியம். சுய ராஜ்ஜியம் மக்கள் தாங்களே தங்களை தனித்தனி அமைப்புகள் மூலம் ஆண்டு கொள்வதை வலியுறுத்துகிறது. இது பிரித்தானிய தத்துவத்திற்கு எதிரானது [7]. எஸ். சத்தியமூர்த்தி, சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு ஆகியோர் ஸ்வராஜியர்களுக்கு எதிராக பிரித்தானிய முறைக்கு இந்தியாவில் வித்திட்டனர். இது இந்தியாவில் அரசியல் அதிகாரத்திற்கும் பொது வாழ்வில் ஊழலுக்கும் வழிவகுத்தது. காந்தியின் சுயராஜ்யத்தத்துவம் அடியோடு கைவிடப்பட்டது [8].

கூட்டுறவு நிறுவனங்கள்

தொகு

நாலாவது தத்துவம் தனியார் அல்லது அரசாங்க தொழிற்சாலைகளை விடவும் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்குவது. அதாவது சுய உதவி குழுக்கள் தமது தயாரிப்புகளை தொடர்ந்து அளித்து தமது வேலை வாய்ப்புகளையும் வருமானங்களை பெருகிகொள்ள முடியும். கூட்டுறவு கிராம வங்கிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்படவேண்டும். சர்வோதயம் இயற்கை மருத்துவத்தை வலியுறுத்துகிறது. விவசாயத்தில் உர மருந்துகள் உபயோகம் மனித இனத்தில் வியாதிகளுக்கு வழிவகுக்கிறது. புரட்சிக்காரரான ஜெய பிரகாஷ் நாராயண் பாதியில் விட்டுச்சென்ற சர்வோதய கொள்கைகளை மீண்டும் மக்கள் மனதில் விதைப்பது இந்த மறுமலர்ச்சியின் சீரிய நோக்கமாகும். ஏனெனில் மக்களால் சர்வோதய இயக்கம் மறக்கப்பட்டு மக்கள் ஜாதி மதம் மொழி அரசியல் காரணங்களால் ஒற்றுமையின்றி வாழ்கின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. தினமலர் ஈரோடு, 16 டிசம்பர் 2017, ப.13.
  2. தினத்தந்தி ஈரோடு, 11 டிசம்பர் 2017.
  3. தினமணி-கோவை,11 டிசம்பர், 2017, ப. 4
  4. டெக்கான் கிரோனிக்ல்- கோவை, 11 டிசம்பர் 2017.
  5. கோவைபோஸ்ட், கோவை, 12 டிசம்பர் 2017.
  6. டைம்ஸ் ஆஃ இந்தியா, ஈரோடு பதிப்பு, 12 டிசம்பர் 2017.
  7. 7.0 7.1 அனுராக் ரத்னா. சர்வோதய ஜனநாயகம். சமூக மாற்றுகள் 1990;8(4):38-42.
  8. ஸ்வராஜ் [இணையத்தளம்]. En.wikipedia.org. 2017. அணுகப்பட்டது: https://en.wikipedia.org/wiki/Swaraj
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வோதய_மறுமலர்ச்சி&oldid=3924942" இலிருந்து மீள்விக்கப்பட்டது