சலங்கை மாடாட்டம்

சலங்கை மாடாட்டம் என்பது தமிழ்நாட்டின் மாநிலத்தின் பழனி, திருப்பூர் பகுதிகளில் நடைபெறும் வழிபாடு சடங்காகும்.[1][2] இது சலங்கை மாடு ஆட்டம், சலங்கை எருதாட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.

கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செலுத்திய காளை மாடுகளுக்கு சூலம் போன்ற குறிகளை இட்டு வளர்க்கின்றனர்.[3] இந்தக் கோயில்மாடுகளுக்கு விவசாய பணிகள் அளிக்கப்படுவதில்லை. தைப்பொங்கலை வரவேற்கும் வகையில் உருமி இசைக்கேற்ப ஆடும் வகையில் மார்கழி மாதம் முழுவதும் மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.[3] இந்த கோயில் மாடுகளை சலங்கை மாடுகள் என அழைக்கின்றனர்.[3]

காவலப்பட்டி சலங்கை மாடாட்டம்

தொகு

இந்த சலங்கை மாடாட்ட நிகழ்வு பொங்கல் திருவிழாவின் போது நடத்தப்படுகிறது. இது முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற‌ பாரம்பரிய நிகழ்வாகும்.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் காவலப்பட்டி ஊரில் தை முதல் நாள் பிறக்கும் காளைக்கன்றுகளை சாமிக்கு நேர்த்திக் கடனாக செலுத்தி விடுகின்றனர்.[4] அக்காளைகளுக்கு காலில் சலங்கை கட்டி ஆடும் பயிற்சி தந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஊர் மைதானத்தில் சலங்கை மாட்டாட்டம் நடத்தப்படுகிறது. காளைமாட்டின் உரிமையாளர்கள் காளையை குளிப்பாட்டி, அலங்கரித்து சலங்கை அணிவித்து ஒன்று கூடும் இடத்திற்கு அழைத்து வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்டம்

தொகு

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை, குடிமங்கலம் பகுதிகளிலும் சலங்கை மாடு ஆட்டம் நடைபெறுகிறது. சோமவாரப்பட்டியில் உள்ள ஆல்கொண்டமால் கோவிலுக்கு தானமாக காளைகளை வழங்குகிறார்கள். அந்க கோயில் காளைகளை சலங்கை மாடுகளாக பயிற்சி அளிக்கிறார்கள்.[2]

ஆதாரங்கள்

தொகு
  1. "காவலப்பட்டியில் பாரம்பரிய 'சலங்கை மாடு' ஆட்டம்". Dinamani.
  2. 2.0 2.1 "மக்களை கவரும் சலங்கை மாடு ஆட்டம்". Tamilmithran.
  3. 3.0 3.1 3.2 "தைபொங்கலை வரவேற்கும் விதமாக சலங்கை மாடு ஆட்டம்". Daily Thanthi. 12 ஜன., 2022. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "பழநியில் சலங்கை மாடு ஆட்டம் - Dinamalar Tamil News". Dinamalar.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலங்கை_மாடாட்டம்&oldid=3929646" இலிருந்து மீள்விக்கப்பட்டது