சலயிர் சுல்தானகம்
சலயிர் சுல்தானகம் என்பது பாரசீகமயமாக்கப்பட்ட[1] மங்கோலிய அரசு ஆகும். இது 1330களில்[2] ஈல்கானகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ஈராக் மற்றும் மேற்கு பாரசீகத்தை ஆண்டது. 50 ஆண்டுகள் நீடித்த இதற்கு தைமூரின் படையெடுப்புகள் மற்றும் காரா கோயுன்லு துருக்மெனியர்களின் கிளர்ச்சி ஆகியவை பிரச்சினைகளாக வந்தன. 1405இல் தைமூரின் இறப்பிற்குப் பிறகு, தெற்கு ஈராக் மற்றும் குசிஸ்தானில் இதை மீண்டும் நிறுவ குறுகிய காலத்திற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1432ஆம் ஆண்டு சலயிர்கள் இறுதியாக காரா கோயுன்லுவால் நீக்கப்பட்டனர்.[3][4]
பாரசீகக் கலை பரிணாமம் பெற்றதில் சலயிர் சகாப்தம் ஒரு முக்கியக் காலமாக விளங்குகிறது. பிற்கால பாரசீக ஓவியங்களுக்கு இது அடிப்படையான சில தன்மைகளைக் கொடுத்தது.[1]