சலாயுலிம் அணை
சலாயுலிம் அணை (Salaulim Dam) இந்தியாவின் கோவா மாநிலத்தில் அமைந்துள்ளது. இது சலாயுலிம் ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. இவ்வணையின் நீரானது குடிநீர் தேவைக்காகவும், தொழிற்சாலை மற்றும் விவசாயப் பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.[1][2][3] இவ்வணையின் ஆழம் 42.7 மீட்டர்கள் ஆகும். நீர்ப்பிடிப்புப் பகுதியின் அளவு 24 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். முதலில் 14,326 ஹெக்டேர்கள் நிலப்பரப்பின் பாசன வசதிக்காக இவ்வணை திட்டமிடப்பட்டது. பின்னர் தென் கோவாவின் குடிநீருக்காக நாள் ஒன்றிற்கு 160 மில்லியன்கள் தேவையையும் கணக்கில் கொள்ளப்பட்டது. பின்னர் தொழிற்சாலை பயன்பாடு என அனைத்தும் சேர்த்து நாள் ஒன்றிற்கு 380 மில்லியன்கள் லிட்டர் என்ற திட்டத்தின் படி வடிவமைக்கப்பட்டது. 1976 ல் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2000 ஆண்டில் பணிகள் முடிவுற்றன. முதலில் திட்ட மதிப்பு 9.61 கோடிகள் என மதிப்பிடப்பட்டு 2007 ஆம் ஆண்டில் 170 கோடிகள் ரூபாய் என மதிப்பிடப்பட்டது.[3][4][5] இவ்வணை சாங்க்யும் நகரிலிருந்து 5 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.[6]
சலாயுலிம் அணை | |
---|---|
பறவைப் பார்வையில் சலாயுலிம் அணை | |
நாடு | இந்தியா |
கட்டத் தொடங்கியது | 1975 |
கட்ட ஆன செலவு | Rs 170 கோடிகள் (தற்போதைய மதிப்பில்) |
உரிமையாளர்(கள்) | Goa Water Resources Department |
அணையும் வழிகாலும் | |
வழிகால் வகை | Concrete, Duckbill type (Morning Glory) 44 m long |
மேற்கோள்கள்
தொகு- ↑ "National Register of Large Dams" (PDF). Goa. Central Water Commission (CWC) and National Informatics center (NIC). p. 46. Archived from the original (pdf) on 21 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 4 February 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ India. Director of Census Operations; Goa (1996). Census of India, 1991: Goa. Controller of Publications. பார்க்கப்பட்ட நாள் 6 February 2011.
- ↑ 3.0 3.1 Olivinho Gomes; National Book Trust (2004). Goa. National Book Trust, India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-237-4139-0. பார்க்கப்பட்ட நாள் 6 February 2011.
- ↑ "Government of Goa Eleventh Five Year Plan 2007–12 and Annual Plan 2007–08" (pdf). Directorate of Planning, Statistics And Evaluation Panaji. pp. 116–117. பார்க்கப்பட்ட நாள் 5 February 2011.
- ↑ "Performance Budget for the Year 2008–2009". Salaulim Irrigation Project. Government of Goa. பார்க்கப்பட்ட நாள் 5 February 2011.
- ↑ B.R. Sinha (1 January 2003). Encyclopedia of Professional Education Volume 7. Sarup & Sons. pp. 268–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7625-410-6. பார்க்கப்பட்ட நாள் 6 February 2011.