சாங்க்யும்
சாங்க்யும் (Sanguem) நகரம் இந்தியாவின் கோவா மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு பகவான் மகாவீரர் காட்டுயிர்ச் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசியப் பூங்கா, சாகமேஷ்வர் கோயில் மற்றும் சலாயுலிம் அணை ஆகியவை அமைந்துள்ளன.
அமைவிடம்
தொகுஇதன் அமைவிடம் 15°14′N 74°10′E / 15.23°N 74.17°E ஆகும்.[1] இது கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.
மக்கட்டொகை
தொகு2011 ஆம் ஆண்டின் மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மொத்த மக்கட்டொகை 6,158 பேர் ஆகும்.[2] இங்கு ஆண்கள் 51% உம் பெண்கள் 49% உம் உள்ளனர். இந்நகரின் கல்வியறிவு 75% ஆகும். ஆண்களின் கல்வியறிவு 81% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 69% ஆகவும் உள்ளது. மக்கட்டொகையில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 6% ஆவர். கொங்கணி, கன்னடா என்பன இங்கு பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Falling Rain Genomics, Inc - Sanguem
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.