பகவான் மகாவீரர் காட்டுயிர்ச் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசியப் பூங்கா

பகவான் மகாவீரர் காட்டுயிர்ச் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசியப் பூங்கா (Bhagwan Mahaveer Sanctuary and Mollem National Park) இந்தியாவின் கோவா மாநிலத்தில் சாங்க்யும் தாலுகாவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 240 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். கர்நாடகம் மாநிலத்தின் எல்லை வரை அமைந்துள்ளது. கோவாவின் தலைநகர் பானாஜியிலிருந்து 57 கிலோமீட்டர்கள் தொலைவில் மொல்லம் நகரில் அமைந்துள்ளது. இது 15°15"30' - 15°29"30' வ, 74°10"15' - 74°20"15' கி என்பவற்றுக்கு இடையே அமைந்துள்ளது.[1]தேசிய நெடுஞ்சாலை 4A-வும் மோர்முகாவ்-லோண்டா இருப்புப்பாதையும் இப்பூங்காவை இரண்டாகப் பிரிக்கின்றன. இத்தேசியப் பூங்காவினுள் கதம்பர் வம்சக் கோயில்கள் அமைந்துள்ளன. மேலும் தூத்சாகர் அருவியும் இப்பூங்காவினுள் அமைந்துள்ளது. இவ்வனப்பகுதியில் கொங்கணி மொழி பேசும் மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.

பகவான் மகாவீரர்
காட்டுயிர்ச் சரணாலயம் மற்றும்
மொல்லம் தேசியப் பூங்கா
தேசியப் பூங்கா
நுழைவுச் சீட்டு அறிவிப்புப் பலகை
நுழைவுச் சீட்டு அறிவிப்புப் பலகை
நாடு இந்தியா
மாநிலம்கோவா
Established1978

வரலாறு தொகு

இப்பகுதியானது முதலில் மொல்லம் காட்டுயிர்ச் சரணாலயம் என அழைக்கப்பட்டது. பின்னர் 1969 ஆம் ஆண்டு பகவான் மகாவீரர் காட்டுயிர்ச் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசியப் பூங்கா என அறிவிக்கப்பட்டது. 107 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இதன் மையப்பகுதி மொல்லம் தேசியப் பூங்கா என 1978ல் அறிவிக்கப்பட்டது.[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. S.D. Gad; S.K. Shyama (2009). "Studies on the food and feeding habits of Gaur Bos gaurus H. Smith (Mammalia: Artiodactyla: Bovidae) in two protected areas of Goa". Journal of Threatened Taxa 1(2): 1 (2): 128–130. http://threatenedtaxa.org/ZooPrintJournal/2009/February/o158926ii09128-130.pdf. பார்த்த நாள்: 2015-06-21. 
  2. The Department of Science, Technology & Environment, Saligao – Bardez, Goa WILDLIFE SANCTUARIES & NATIONAL PARKS பரணிடப்பட்டது 2016-10-24 at the வந்தவழி இயந்திரம்
  3. "(9/10/2005) The Hindu, Bhagwan Mahavir Sanctuary". Archived from the original on 2006-06-24. பார்க்கப்பட்ட நாள் 2015-06-21.