தூத்சாகர் அருவி

பாற்கடல் அருவி என்னும் நேரடிப் பொருளுடைய தூத்சாகர் அருவி (Dudhsagar Falls) இந்தியாவிலுள்ள கோவாவில், மண்டோவி ஆற்றில் அமைந்துள்ளது. இது கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைக்கு அருகில் பனாஜியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தூத்சாகர் அருவி
தூத்சாகர் அருவி
Map
அமைவிடம்Goa
ஆள்கூறு15°18′46″N 74°18′51″E / 15.31277°N 74.31416°E / 15.31277; 74.31416
வகைTiered (4 Tiered)
மொத்த உயரம்320 metres (1017 feet)
வீழ்ச்சி எண்ணிக்கை5
சராசரி அகலம்30 metres (100 feet)
நீர்வழிமாண்டோவி ஆறு

தூத்சாகர் அருவி, மண்டோவி ஆற்றின் மேல் பகுதியில் அமைந்துள்ளதால், வரண்ட காலங்களில் கவர்ச்சியாக இருப்பதில்லை. எனினும், மழைக் காலங்களில் இந்தியாவின் வலுமிக்க அருவிகளில் ஒன்றாக மாறுகிறது. 310 மீட்டர் உயரம் கொண்ட இது இந்தியாவின் ஐந்தாவது உயரமான அருவியாக உள்ளதுடன், உலகின் உயர்ந்த அருவிகளில் 227 ஆவது இடத்திலும் உள்ளது.

மேலும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dudhsagar Falls
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூத்சாகர்_அருவி&oldid=3714688" இலிருந்து மீள்விக்கப்பட்டது