சலாளி
சலாளி (அ) சலஅள்ளி (ஜலஹள்ளி ),(ஆங்கிலம்: Jalahalli) பெங்களூரின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலை பகுதியாகும்.[1] இது சல அள்ளி அல்லது சலஅள்ளி வட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பெங்களூரின் பசுமையான பகுதிகளில் ஒன்றாகும். இது முக்கியமாக சலஅள்ளி கிழக்கு மற்றும் மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளது. கங்கம்மா வட்டம் என்பது சலஅள்ளி கிழக்கு, சலஅள்ளி மேற்கு, சலஅள்ளி கிராமம் மற்றும் ஜலஹள்ளி வட்டம் ஆகியவற்றை இணைக்கும் சாலைகளுக்கு இடையிலான சந்திப்பாகும். பெங்களூரில் உள்ள தேசிய சுங்க மற்றும் போதைப்பொருள் அகாதமி இங்கு அமைந்துள்ளது.
இங்கு பாரத மிகு மின் நிறுவனம் (பிஇஎல்), இந்துசுதான் கருவி மற்றும் உபகரணங்கள் நிறுவனம் (எச்எம்டி), சிஎம்டிஐ மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களான முக்கிய தொழில்துறை பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த பகுதியில் பாரத் ஃபிரிட்ஸ் வெர்னர் லிமிடெட் (பி.எஃப்.டபிள்யூ), டாடா டீ நிறுவன அலகு மற்றும் பிற சிறிய அளவிலான தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு தனியார் தொழில்களும் உள்ளன.
நிலவியல்
தொகுசலஅள்ளி கிழக்கில் சகர்பாண்டி மாநில வனப்பகுதியில் நிலம் உள்ளது. சலஅள்ளி கிழக்கு விமானப்படை நிலையம் கங்கம்மா வட்டம் மற்றும் எம்.எஸ்.பல்யா இடையே அமைந்துள்ளது. எம்.எஸ்.பல்யாவும் வித்யாரண்யபுரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சலஅள்ளி மேற்கு, குவெம்பு நகர், தென்னைத் தோப்பு மற்றும் தைல மரத் தோட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் இந்திய விமானப்படை பயிற்சி மையம், அய்யப்பன் கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான செட்டிஅள்ளி போன்றவை அடங்கும். இந்த இடம் சலஅள்ளி வட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 4 (தும்கூர் நெடுஞ்சாலை) மற்றும் கங்கம்மா வட்டத்தில் சலஅள்ளி கிழக்கு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. யில் உள்ள மற்ற அடையாளங்களில்பாரத மிகு மின் நிறுவனச் சந்தை, கங்கம்மா வட்டம், சலஅள்ளி கிராமம் மற்றும் சலஅள்ளி வட்டம் ஆகியவை அடங்கும். சலஅள்ளி அண்டை பகுதிகளில் கங்கம்மா வட்டம், குவேம்புவின் நகர், கொம்மகொந்தன அள்ளி, சித்தார்த்த நகர், பீன்யா, அப்பிகிரே ராமச்சந்திரபுரம், கெப்பால், வித்யாரண்யபுர, தாசர அள்ளி, மத்திகரை, மற்றும் யசுவந்த்பூர் போன்ற பகுதிகள் அடங்கும்.
போக்குவரத்து
தொகுஇப்பகுதியை பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம் இணைத்துள்ளது. நகரத்தின் முக்கிய பகுதிகள் / பேருந்து முனையங்களுடன் இப்பகுதியை இணைக்கிறது.[1]
தற்போதைய குடியேற்றங்கள்
தொகுசல அள்ளி கிராமம் பெரிய அரசாங்க அமைப்புகளால் சூழப்பட்டுள்ளது, இவை சுதந்திரத்திற்குப் பிறகு தொடங்கப்பட்டன. சல அள்ளி கிராமத்தில் உள்ளவர்களில் பலர் . (பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஏ.கே.ஏ பெல், இந்துஸ்தான் இயந்திர கருவிகள் ஏ.கே.ஏ எச்.எம்.டி, ஏர்ஃபோர்ஸ் மற்றும் இஸ்ரோ) போன்ற பெரு நிறுவங்களிலின் ஊழியர்கள். 90 களின் பிற்பகுதியில் பெங்களூரில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பம் ஏற்றம் காரணமாக அவர்களின் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். சுதந்திரத்திற்கு முன்னர், இது உள்ளூர் கிராமவாசிகளின் ஒரு சிறிய குக்கிராமம் மற்றும் பிரித்தானிய ஆட்சியின் போது விமானப்படையால் அமைக்கப்பட்ட இந்திய விமானப்படை பயிற்சி மையம் மட்டுமே குறிப்பிடத்தக்கது.
குறிப்பிடத்தக்கவர்கள்
தொகுஆர்.அசோகாபாஜக தலைவர் மற்றும் கர்நாடகவின் முன்னாள் துணை முதலமைச்சர் ஆவார். எஸ். ரமேசு, காங்கிரஸ் தலைவர், முன்னாள் கர்நாடக அமைச்சர் மற்றும் கர்நாடக திரைப்பட வர்த்தகசபையின் முன்னாள் தலைவர் ஆவார்.[2][3]
திரைப்படங்கள் மற்றும் புத்தகங்களில்
தொகுகட்டே ராமச்சந்திரா என்பவர் இயக்கிய 1979 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான "அரிவு" (விழிப்புணர்வு) ச அள்ளியில் (பி.இ.எல் காலனி மற்றும் பி.இ.எல் பள்ளி) படமாக்கப்பட்டது, இது 70 களின் பிற்பகுதியில் சல அள்ள்யின் நல்ல காட்சி ஆவணமாகும்.[4] கென்னத் ஆண்டர்சன் எழுதிய நைன் மேனீட்டர்ஸ் அன்ட் ஒன் ரோக் என்ற புத்தகத்தில் உள்ள கதைகளில் சல அள்ளியில் சிறுத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.[5]
தொழிற்சாலைகள்
தொகு- பாரத மிகு மின் நிறுவனம்
- (எச். எம். டி நிறுவனம் ) இந்துசுதான் கருவி மற்றும் உபகரணங்கள் நிறுவனம் (HMT),
- டாட்டா தேயிலை தொழிற்சாலை.
மேற்குறிப்புகள்
தொகு- ↑ Oct 30, Bangalore Mirror Bureau | Updated:; 2018; Ist, 06:00. "There's good news for Jalahalli Cross". Bangalore Mirror (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 September 2019.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "S. Ramesh passes away". 8 July 2006 – via The Hindu.
- ↑ "S.Ramesh". Archived from the original on 2019-12-04. பார்க்கப்பட்ட நாள் 2019-11-10.
- ↑ "Arivu (1979) Kannada movie:".
- ↑ "Full text of "Nine Man-eaters and One Rogue (1954)"".