சல்பான் அரசர்

புவார் அரச குடும்பத்தை சார்ந்த ராஜ்புத் அரசர்

சல்பான் அரசர் ( ஷாலிவாஹனா அல்லது சல்வான் என்றும் அழைக்கப்படுகிறார்) 10-11 ஆம் நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டத்தின் ஒரு புவார் அரச குடும்பத்தை சார்ந்த ராஜ்புத் அரசர் ஆவார், அவர் சியால்கோட் கோட்டையை (பின்னர் நகரமாக மாறிய) நிறுவியதாக நம்பப்படுகிறது. சியால்கோட் இப்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், இந்தியாவின் வடகிழக்கு எல்லைக்கு அருகில் உள்ளது.

அரசர் சல்பானுக்கு லூனா சும்பா மற்றும் இச்ரான் என்ற இரண்டு மனைவிகள் இருந்தனர்; லூனா அரசி ஜம்முவின் தாழ்த்தப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவர், இச்ரான் அரசி உகோகிக்கு அருகிலுள்ள ரோராஸில் வாழ்ந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சல்பான் அரசன் அவரது இரு மனைவிகளையும் சமமாக கருதினாலும் இச்ரானின் மீது அதிக  பாசமும் நேசமும் கொண்டிருந்தார். மேலும் அவளுக்காக ஒன்பது சதுர மைல் பரப்பளவைக் கொள்ளும் இடத்தில அற்புதமான அரண்மனையை இந்திய மற்றும் கிரேக்க கட்டிடக்கலைஞர்களை கொண்டு வடிவமைத்து கட்டியும் வந்தார்.

அரசி இச்ரானின் அரண்மனை முடிவடையும் தருவாயில் இருந்தபோது, அவர் அரசர் சல்பானின் முதல் மகனைப் பெற்றெடுத்தார், அந்த அழகான குழந்தையே வாரிசு உரிமைப்படி அந்த அரசின் அடுத்த அரசராகவும் இருக்கும். சியால்கோட் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து அவரது பிறந்த நாளைக் கொண்டாடினர்.மேலும் பல வாரங்களாக அரண்மனை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் குழந்தையை காண வந்தனர். உள்ளூர் பண்டிதர்கள் ஜோதிடர்கள் மற்றும் கைரேகை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில், இளம் இளவரசரின் பெயர் பூரன் (பூ-ரன் என) தேர்ந்தெடுக்கப்பட்டது. அரசர் சல்பானின் இரண்டாவது மனைவியான அரசிக்கு லூனாவிற்கு குழந்தை எதுவும் இல்லை. அதனாலும், அரசர் இச்ரான் அரிசியுடன் நெருக்கமாக இருந்ததாலும் அவள் மீதும் பிறந்த குழந்தையான பூரன் மேலும் மிகுந்த பொறாமை கொண்டாள், மேலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இச்ரான் அரிசியையும் இளவரசன் பூரணையம் அவமதித்தும் வந்தாள்.

இளவரசர் பூரன் அழகான, அறிவான இளைஞனாக வளர்ந்தான். இளம் இளவரசன் மீது லூனா அரசிக்கு காதல் மயக்கம் ஏற்பட்டது. தனது அறைக்கு வரவழைத்து இளவரசரை மயக்க முயன்றாள் சிற்றன்னையான லூனா ஆனால் அதனை உணர்ந்த பூரன், அதை மறுத்து அவளிடம் இருந்து தப்பித்து சென்றார். தன நிலைமையேய் எண்ணி அரசி லூனா மிகவும் வெட்கமாகவும் அதே சமயம் கோபமாகவும் உணர்ந்தாள், இளவரசர் பூரன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அரசர் சல்பானிடம் பொய் சொன்னாள். சல்பான் அரசரும் உண்மையை அறியாமல் மிகவும் கோபமடைந்து, இளவரசர் பூரனின் கைகளையும் கால்களையும் வெட்டி கிணற்றில் வீசுமாறு தனது வீரர்களுக்கு கட்டளையிட்டார். வீரர்கள் ராஜா சல்பானின் கட்டளையை நிறைவேற்றி, இளவரசரின் கை மற்றும் கால்களை வெட்டி நகருக்கு வெளியே  ஒரு கிணற்றில் வீசினர். அந்த கிணறு இன்றும் பூரானின் கிணறு என்று அழைக்கப்படுகிறது. [1]

செனாப் நதிக்கரையில் வாழ்ந்த ஒரு ஆன்மீக ஆசிரியரான, குரு கோரக்நாத், அவரது தோழர்களுடன் அந்தக் கிணற்றின் அருகே தற்செயலாக அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது காயமடைந்த இளவரசரைக் கண்டுபிடித்து அவரை மீட்டனர். இளவரசர் ஓரளவு குணமடைந்த பின்பு அவரது கதையை குருவிடம் விவரித்தார். குரு கோரக்நாத் அவரை தனது குழுவில் சேர்ந்து உடல் மற்றும் ஆன்மிக வளர்ச்சியை தொடங்க அழைத்தார். அதன்படி அங்கே சில வருடங்கள் தங்கிய பிறகு, குரு கோரக்நாத் இளவரசரை அதே கிணற்றின் அருகே முகாமைக் கட்டி தங்கும்படி கட்டளையிட்டார். இளவரசர் பூரன் பல ஆண்டுகள் அங்கேயே தங்கி அப்பகுதி மக்களுக்கு ஆன்மிக அறிவுரைகளை வழங்கினார். காலப்போக்கில், அவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் மற்றும் '''பூரன் பகத்''' என்று அறியப்பட்டார்.மேலும் அவரது தோற்றமும் முற்றிலும் மாறியது.

பூரன் பகத்தின் புகழ் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லாத அரசி லூனாவின் அரண்மனையை அடைந்தபோது, ​​​​அவள் சல்பான் அரசருடன் அவரைச் சந்தித்து தனக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டாள். இளவரசன் பூரன் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதை அரசி லூனா சொன்னால் மட்டுமே தன்னால் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய முடியும் என்று பூரன் அவர்களிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அரசி லூனா எல்லா உண்மையை வெளிப்படுத்தினார். உண்மைகளை சொன்னதும் பூரன் தனது அடையாளத்தை வெளிப்படுத்தினார். அதைக்கண்டு  ராஜா சல்பான் மேலும் அதிர்ச்சியடைந்தார்.

இருவரும் மன்னிப்பு கேட்டதோடு அவரை மறுபடியும் தன்னோடு அரண்மனைக்கு வரச் சொல்லி கேட்டுக்கொண்டனர்.  ஆனால் பூரன் அதை  மறுத்து, அவர்கள் இறைவனால் மன்னிக்கப்படலாம் என்றும் '''ரசலு''' என்று பெயரிடப்பட்ட ஒரு மகனைப் பெறலாம் என்றும் கூறினார்.

அதைத்தொடர்ந்து, பூரன் பகத்தின் வழிபாட்டிற்காக ஒரு இடத்தைக் கட்டியதோடு, அவரது முகாமில் வருபவர்களுக்காக இலவச உணவு விநியோகத்தையும் ஏற்பாடு செய்தார் . அவர் இறந்தபோது, ​​அவரது இறுதிச் சடங்கு அவர் வசித்த இடத்தின் முன்பாகவே ஒரு மேட்டில் நடந்தது. அவரது நினைவாக ஒரு அழகான சிறிய கல்லறை எழுப்பப்பட்டது.

'''புரான் கிணறு''' என்பது சியால்கோட் நகருக்கு வெளியே அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற வரலாற்று தளமாகும். சியால்கோட்டில் 1857 - ம் ஆண்டு நிகழ்ந்த கலகத்தின் போது கூட பூரானின் கல்லறையின் எச்சங்கள் இருந்தன, ஆனால் இப்போது ஒரு சிறிய கட்டிடம், வழிபாட்டிற்கான ஒரு சிறிய இடம் மற்றும் ஒரு ஓடும் கிணறு தவிர வேறு எந்த கல்லறையும் இல்லை.

ராஜா சல்பஹானின் மரணத்திற்குப் பிறகு ராஜா ரசலு பிறந்தார். சியால்கோட் அவரது ஆட்சியின் போது பெரிதும் செழித்தது.

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்பான்_அரசர்&oldid=3651573" இலிருந்து மீள்விக்கப்பட்டது