சல்மா அல் கிண்டி

ஓமான் நாட்டு வேதியியலாளர்

சல்மா அல் கிண்டி (Salma Al Kindi) ஓமான் நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளராவார். இவர் பகுப்பாய்வு வேதியியல் பேராசிரியராகவும், ஓமான் நாட்டிலுள்ள சுல்தான் கபூசு பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியின் அறிவியல் புலத் தலைவராகவும் உள்ளார். [1]

சல்மா அல்-கிண்டி தனது இளம் வேதியியல் பட்டத்தை 1982 ஆம் ஆண்டு எகிப்தின் கெய்ரோ பல்கலைக்கழகத்திலும் 1988 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பகுப்பாய்வு வேதியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். 1989 ஆம் ஆண்டு இவர் ஓமானிலுள்ள சுல்தான் கபூசு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். இப்பல்கலைக்கழக வரலாற்றில் முதலாவது பெண் பேராசிரியர் என்ற சிறப்பும் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதலாவது ஓமன் நாட்டுப் பெண் என்ற சிறப்பும் சல்மா அல் கிண்டிக்குக் கிடைத்துள்ளது.

2017 ஆம் ஆண்டு சென்னையை தளமாகக் கொண்ட அனைத்துலக அறக்கட்டளை நிறுவனம் வேதியியலில் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார். [2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்மா_அல்_கிண்டி&oldid=3243337" இலிருந்து மீள்விக்கப்பட்டது