சல்மா ஹாயெக்

மெக்சிக-அமெரிக்க நடிகை மற்றும் தயாரிப்பாளர்

சல்மா கயெக் பினோல்ட் (ஆங்கில மொழி: Salma Hayek Pinault) (பிறப்பு: செப்டம்பர் 2, 1966)[2][3][4] என்பவர் மெக்சிக்கோ மற்றும் அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் பெண்களுக்கு எதிரான வன்முறை, புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான பாகுபாடுகள் ஆகியவற்றுக்கு எதிரான விழிப்புணர்வை அதிகரிப்பது உள்ளிட்டவை சல்மாவின் நற்பணிகள் ஆகும்.

சல்மா கயெக்
பிறப்புசல்மா வல்கர்மா கயெக் ஜிமினெசு [1]
செப்டம்பர் 2, 1966 (1966-09-02) (அகவை 58)
கோட்சாகோல்கோசு, வெராக்ரூசு, மெக்சிக்கோ
தேசியம்
  • மெக்சிக்கன்
  • அமெரிக்கன்
பணிநடிகை, திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1988–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
பிரான்சுவா-ஹென்றி பினால்ட் (தி. 2009)
பிள்ளைகள்1

இவர் மெக்சிகோவில் தனது நடிப்புத்துறை வாழ்க்கையை தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'தெரேசா' என்ற தொடரிலும், 1995 ஆம் ஆண்டு 'எல் காலெஜோன் டி லாஸ் மிலாக்ரோசு' என்ற திரைப்படத்திலும் நடித்ததற்காக, ஏரியல் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அதை தொடர்ந்து டெஸ்பராடோ (1995), ஃப்ரம் டஸ்க் டூ டான் (1996), வைல்ட் வைல்ட் வெஸ்ட் மற்றும் டாக்மா (1999) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவர் பிரபலமான நடிகை ஆனார். இவர் 2017 ஆம் ஆண்டில் 'பீட்ரிஸ் அட் டின்னர்' என்ற படத்தில் நடித்ததற்காக இன்டிபென்டன்ட் இசுபிரிட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இவர் கிரோன் அப்சு (2010), புஸ் இன் பூட்சு (2011), கிரோன் அப்சு 2 (2013), டேல் ஆஃப் டேல்சு (2015), சாசேஜ் பார்ட்டி (2016), தி ஹிட்மேன்ஸ் பாடிகார்ட் (2017), லைக் எ பாஸ்சு (2020) மற்றும் ஹிட்மேன் வைப் பாடிகார்ட் (2021) போன்ற அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான எட்டெர்னல்சு என்ற படத்தில் 'அஜக்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

சல்மா செப்டம்பர் 2, 1966 ஆம் ஆண்டில் மெக்சிகோவில்[5] உள்ள வெராக்ரூஸில், கோட்சகோல்கோசில், ஓபரா பாடகியான டயானா ஜிமினெசுக்கும் எண்ணெய் நிறுவன நிர்வாகியான சாமி கயெக்கிற்கும் மகளாகப் பிறந்தார். சல்மாவின் தந்தை லெபனான் மெக்சிகன்[6] வம்சாவளியையும், இவரது தாயார் மெக்சிகன் எசுப்பானிய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2015 ஆம் ஆண்டு மத்ரித் சென்றிருந்த போது ஒரு நேர்காணலில், இவர் தன்னை ஐம்பது சதவிகிதம் லெபனான் மற்றும் ஐம்பது சதவிகிதம் எசுப்பானியர் என்று விவரித்தார், தனது பாட்டி/தாய்வழி தாத்தா பாட்டி எசுப்பானியாவிலிருந்து வந்தவர்கள் என்று கூறினார்.[7][8][9] இவருக்கு சாமி என்ற இளைய சகோதரர் உண்டு இவர் ஒரு தளபாட வடிவமைப்பாளர் ஆவார். இவர் ஒரு வசதியான சமய நம்பிக்கை உள்ள கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்.[10]

தொழில்

தொகு

இவர் 1989 ஆம் ஆண்டில் தனது 23 ஆம் வயதில் வெற்றிகரமான மெக்சிகன் நாட்டு 'தெரெசா' என்ற தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் மூலம் சல்மா மெக்சிகோவில் ஒரு பிரபல நடிகையானார்.[11] அதை தொடர்ந்து 1994 ஆல் ஆண்டில் 'எல் கால்லிஜன் டி லாஸ் மிலக்ரோசு' என்ற திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படம் மெக்சிகோ நாட்டு திரைப்பட வரலாற்றில் அதிகமான விருதுகளை பெற்ற படம் ஆகும். இப்படத்தில் சிறந்த நடிப்பிற்காக ஏரியல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் ஒரு அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அவர் ராம்தாவின் அறிவொளிப் பள்ளியில் படித்தார் மற்றும் யோகா பயிற்சியும் பயின்றார்.[12] இவர் கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டார் ஆனால் 2007 ஆம் ஆண்டு நேர்காணலில், தான் இனி கடவும் நம்பிக்கையுடன் இல்லை என்றும், தேவாலயத்தில் நம்பிக்கை இல்லை என்றும் கூறினார், ஏனெனில் ஆப்பிரிக்காவில் ஆணுறைகளுக்கு எதிரான பிரச்சாரம் போன்ற நடைமுறைகளுடன் அவர் உடன்படவில்லை, அங்கு எய்ட்ஸ் மற்றும் அதிக மக்கள் தொகை இருப்பதாக அவர் கூறினார். பரவலானது, இருப்பினும் அவர் இன்னும் இயேசு கிறிஸ்துவையும் கடவுளையும் நம்புவதாக அவர் தெளிவுபடுத்தினார்.[13]

மார்ச் 9, 2007 அன்று பிரெஞ்சு கோடீஸ்வரரும் கெரிங் தலைமை நிர்வாக அதிகாரியுமான பிரான்சுவா-ஹென்றி பினால்ட் என்பவருடன் தனது நிச்சயதார்த்தத்தையும் கர்ப்பமாக இருப்பதையும் ஹயக் உறுதிப்படுத்தினார். அவர் செப்டம்பர் 21, 2007 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவில் உள்ள சிடார்ஸ்-சினாய் மருத்துவ மையத்தில் அவர்களது மகள் வாலண்டினா பலோமா பினால்ட்டைப் பெற்றெடுத்தார்.[14][15][16] இருவரும் 2009 காதலர் தினத்தன்று பாரிஸில் திருமணம் செய்து கொண்டனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Salma Hayek - Biography, Movies, TV Shows, & Facts". Encyclopedia Britannica. பார்க்கப்பட்ட நாள் December 15, 2018.
  2. "Salma Hayek changes her name". USA Today. பார்க்கப்பட்ட நாள் January 10, 2015.
  3. "Monitor". Entertainment Weekly (1275): pp. 25. Sep 6, 2013. 
  4. "Today in history: September 2". NBC News. February 9, 2006. பார்க்கப்பட்ட நாள் June 25, 2012.
  5. "Sami Hayek From Hollywood to Mexico, Salma's Little Brother Wins Fans with His Hip Designs". People. Archived from the original on மார்ச் 3, 2016. பார்க்கப்பட்ட நாள் October 7, 2013. {{cite magazine}}: Check date values in: |archive-date= (help)
  6. "Salma Hayek". Lipton, James (host). Inside the Actors Studio. Bravo. December 5, 2004. No. 1105, season 11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-08-28. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  7. La reina Letizia le hizo reconocimiento a Salma Hayek en España - Un Nuevo Día - Telemundo. April 23, 2015. பார்க்கப்பட்ட நாள் January 5, 2016 – via YouTube.
  8. "Salma Hayek Biography". Biography.com. Archived from the original on June 3, 2008. பார்க்கப்பட்ட நாள் May 10, 2009.
  9. "Salma Hayek Biography". imdb. பார்க்கப்பட்ட நாள் March 7, 2015.
  10. "Salma Hayek". Hello!. Archived from the original on May 15, 2010. பார்க்கப்பட்ட நாள் June 24, 2010. ...raised in a conservative Catholic family...
  11. "Salma Hayek- Biography". Yahoo! Movies. Archived from the original on September 6, 2014. பார்க்கப்பட்ட நாள் October 13, 2012.
  12. "Ramtha's School of Enlightenment, the School of Ancient Wisdom". 2006. Archived from the original on September 10, 2006. பார்க்கப்பட்ட நாள் October 21, 2006. Having been a skeptic for most of my life, Ramtha has taught me about the possibilities we all have to influence reality using science to explain the mechanics in a way that finally makes sense to me. His technique on creating the day has been very effective in my life.
  13. Savacool, Julia (April 18, 2007). "Salma Hayek: Hot Mama!". Marie Claire. பார்க்கப்பட்ட நாள் March 31, 2013.
  14. R., Karen (September 24, 2007). "Hayek Gives Birth To Baby Girl". San Francisco Chronicle. Archived from the original on August 6, 2020. பார்க்கப்பட்ட நாள் September 20, 2020.
  15. McNiece, Mia (August 19, 2015). "Salma Hayek Talks Daughter Valentina, Having a Baby Later in Life". People.
  16. Hayek, Salma (September 20, 2020). "Untitled". Instagram. Archived from the original on September 20, 2020. பார்க்கப்பட்ட நாள் September 20, 2020. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்மா_ஹாயெக்&oldid=3929655" இலிருந்து மீள்விக்கப்பட்டது