சவிதா கன்சுவால்

சவிதா கன்சுவால் (Savita Kanswal) என்பவர் உத்தராகண்டம் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மலையேறுபவர் ஆவார். 16 நாட்களுக்குள் எவரெசுட்டு சிகரம் மற்றும் மக்காலு ஆகிய இரண்டு சிகரத்திலும் ஏறிய முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.[1] இவர் அக்டோபர் 4,2022 அன்று பனிச்சரிவு விபத்தில் இறந்தார். சனவரி 2024-இல், இவர் இந்தியாவின் சாகச விளையாட்டுகளில் மிக உயர்ந்த கரவமான டென்சிங் நோர்கே தேசிய சாகச விருதை மரணத்திற்குப் பிறகு பெற்றார்.[2]

சவிதா கன்சுவால்
பிறப்புஉத்தராகண்டம், இந்தியா
இறப்புஅக்டோபர் 4, 2022
துரபாடி கா தண்டா, உத்தரகாசி மாவட்டம்
தேசியம் இந்தியா

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

சவிதா கன்சுவால் உத்தரகாசியின் தொலைதூர லோந்த்ரு கிராமத்தில் கீழ் நடுத்தர வர்க்க விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். நான்கு சகோதரிகளில் இவர் இளையவர். 2013ஆம் ஆண்டில், உத்தரகாசியில் உள்ள நேரு மலையேற்ற பயிற்சி நிறுவனத்தில் அடிப்படை மற்றும் மேம்பட்ட மலையேறும் படிப்புகளை முடித்தார்.[3]

தொழில்

தொகு

சவிதா மே 2022 இல் உலகின் மிக உயரமான சிகரமான எவரெசுட்டு சிகரத்தில் இந்தியாவின் கொடியை உயர்த்தியதன் மூலம் தேசிய சாதனையைப் படைத்தார். இவர் மே 12,2022 அன்று எவரெசுட்டு சிகரத்தில் (8848 மீ) ஏறி, 16ஆவது நாளில் இந்த மைல்கல்லை அடைந்தார். மே 28,2022 அன்று, இவர் உலகின் ஐந்தாவது மிக உயரமான சிகரமான மகாலுவை (8485 மீ) மீது ஏறினார்.[1][4]

எவெரெசுடுக்கு முந்தைய பயணத்திற்கு முன், சவிதா திரிசூல மலை உட்பட இந்தியா முழுவதும் ஐந்து சிகரங்களில் வெற்றிகரமாக ஏறினார். திரௌபதி கா தண்டா சிகரத்தில் நேரு மலையேற்ற பயிற்சி நிறுவனத்தின் மேம்பட்ட மலையேறும் பயிற்சியின் பயிற்றுவிப்பாராக பணியாற்றினார்.[5]

மரணம்

தொகு

உத்தராகண்டம் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள திரௌபதி கா தண்டா-2 சிகரத்தில் பனிச்சரிவில் சிக்கி சவிதா 4 அக்டோபர் 2022 அன்று இறந்தார்.[6][7] பாரம்பரியத்தைப் பின்பற்றி, இவருக்கு 'ஜல் சமாதி' (தண்ணீரில் அடக்கம்) செய்யப்பட்டது. இது உத்தராகண்டத்தில் சகோதரர்கள் இல்லாத திருமணமாகாத பெண்களுக்கு அனுசரிக்கப்படும் ஒரு நடைமுறையாகும்.[8]

உத்தராகண்டம் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மனேரி இடைநிலைக் கல்லூரியின் பெயரைச் சவிதாவின் பெயரில் மாற்றுவதாக அறிவித்துள்ளார்.[3] இந்திய அரசால் 2022 டென்சிங் நோர்கே தேசிய சாகச விருது இவருக்கு மரணத்திற்குப் பிறகு வழங்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Singh, Simran (July 25, 2022). "Savita Kanswal became the first Indian woman to summit Everest in 16 days". The Daily Guardian. https://thedailyguardian.com/123782-2/. 
  2. 2.0 2.1 M., Rahul (January 9, 2024). "Family Gets Emotional As Savita Kanswal Conferred Tenzing Norgay National Adventure Award Posthumously". The Free Press Journal. https://www.freepressjournal.in/india/heartwarming-moment-of-the-day-family-gets-emotional-as-savita-kanswal-conferred-tenzing-norgay-national-adventure-award-posthumously-video. 
  3. 3.0 3.1 "एवरेस्ट फतह कर रचा था इतिहास, हादसे में गई थी जान; आज भी प्रेरणा देती है इनकी कहानी" (in Hindi). Jagran. October 4, 2022. https://www.jagran.com/uttarakhand/uttarkashi-savita-kanswal-will-remain-an-inspiration-for-daughters-of-uttarakhand-and-country-23546919.html. 
  4. "Mountaineer Savita Kanswal clocks national record for scaling Mount Everest, completes 10 expeditions". June 6, 2022. https://economictimes.indiatimes.com/magazines/panache/mountaineer-savita-kanswal-clocks-national-record-for-scaling-mount-everest-completes-10-expeditions/articleshow/92027218.cms?from=mdr. 
  5. Negi, Sunil (October 17, 2020). "हौसलों ने भरी उड़ान तो छोटा पड़ गया आसमान, उत्‍तराखंड की सविता कंसवाल ने विपरीत परिस्थितियों से लड़कर बनाया रास्ता". Jagran. https://www.jagran.com/uttarakhand/dehradun-city-savita-kanswal-of-uttarakhand-made-her-way-through-fighting-adversity-20893154.html. 
  6. "Savita Kanswal, Record-Setting Mountaineer Who Scaled Everest, Dies in Avalanche". The Quint. https://www.thequint.com/gender/savita-kanswal-death-first-indian-woman-mount-everest-mount-makalu-passes-away-avalanche-uttarkashi#read-more. 
  7. "Record-setter mountaineer Savita Kanswal among those killed". https://www.thehindu.com/news/national/uttarakhand-avalanche-record-setter-mountaineer-savita-kanswal-among-those-killed/article65971601.ece. 
  8. "Last rites of Savita Kanswal, Naumi Rawat concluded". Times of India. https://timesofindia.indiatimes.com/city/dehradun/uttarakhand-avalanche-tragedy-last-rites-of-savita-kanswal-naumi-rawat-concluded/articleshow/94732905.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவிதா_கன்சுவால்&oldid=3947557" இலிருந்து மீள்விக்கப்பட்டது