சவுக்கூர் செயபிரகாசு செட்டி

இந்திய வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி

சவுக்கூர் செயபிரகாசு செட்டி (Sowkoor Jayaprakash Shetty) (ஏப்ரல் 12, 1935 - செப்டம்பர் 7, 2015) இந்திய வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செட்டி 1935 ஆம் ஆண்டுஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியன்று புகழ்பெற்ற வழக்கறிஞர் பி. நாராயண செட்டி மற்றும் ருக்மணி என். செட்டி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். செட்டி 1967 ஆம் ஆண்டு பிரம்மாவரா தொகுதியில் இருந்து அதிக பெரும்பான்மையுடன் சட்டப் பேரவைக்கு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பதவிக் காலத்தின் முடிவில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, செட்டி செயல்பாட்டில் ஈடுபட்டார். இவர் மறைந்த டாக்டர் விசாலாட்சி செட்டியை மணந்தார். செயப்பிரகாசு செட்டி 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அன்று நீண்டகால நோயால் இறந்தார். [1] [2]

சவுக்கூர் செயபிரகாசு செட்டி
பிறப்பு12-ஏப்ரல்-1935
இறப்பு07-செப்டம்பர்-2015 (வயது 80)
பணி
வாழ்க்கைத்
துணை
விசாலாட்சி செட்டி

மேற்கோள்கள்

தொகு
  1. Ganesh Prabhu (September 8, 2015). "Jayaprakash Shetty dead". The Hindu.
  2. "Udupi: Former MLA, Advocate S Jayaprakash Shetty no more". daijiworld.com. September 8, 2015.