சவுத்ரி மகபூப் அலி

இந்திய அரசியல்வாதி

சவுத்ரி மகபூப் அலி கைசர் (Choudhary Mehboob Ali Kaiser) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பீகார் மாநிலத்தை சார்ந்தவர்.

சவுத்ரி மகபூப் அலி கைசர்
16வது மக்களவையில் உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்தினேசு சந்திர யாதவ்
தொகுதிககரியா மக்களவைத் தொகுதி
இந்திய தேசிய காங்கிரசு பீகார் மாநில தலைவர்
பதவியில்
2010–2013
முன்னையவர்அனில் குமார் சர்மா
பின்னவர்அசோக் சவுத்ரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 மே 1958 (1958-05-13) (அகவை 65)
சகர்சா
அரசியல் கட்சிலோக் ஜனசக்தி கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்சிமிரி பக்தியார்ப்பூர்
முன்னாள் கல்லூரிஅலிகார் முசுலீம் பல்கலைக்கழகம்
As of 12 டிசம்பர், 2016
மூலம்: [1]

ஆரம்பக்கால வாழ்க்கை தொகு

இவர் 1958-ஆம் ஆண்டின் மே மாதம் 13ஆம் தேதி பிறந்தார். இவரின் சொந்த ஊர் பீகாரின் தலைநகரான பட்னா ஆகும். இவரது தந்தை பீகார் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் சவுத்ரி சலாகுதீன் ஆவார். இவர் அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்தார்.[1]

அரசியல் வாழ்க்கை தொகு

கைசர் தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசில் தொடங்கினார். சிமிர்- பக்தியார்ப்பூர் தொகுதியில் காங்கிரசு சார்ப்பில் போட்டியிட்டு மூன்று முறை வென்றுள்ளார். பின் 2014 ஆம் ஆண்டு காங்கிரசில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவிலை என்ற காரணத்திற்காக லோக் ஜன்சக்தி கட்சியின் இணைந்தார். 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் லோக் ஜன்சக்தி கட்சி சார்பில் ககரியா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.[2]

வகித்த பதவிகள் தொகு

இவர் காங்கிரசு கட்சியின் அகில இந்திய செயலாளராக (2007 - 2010) இருந்துள்ளார்.[3] பின்பு பீகார் மாநில காங்கிரசின் தலைவராகவும் (2010-2013) இருந்தார்.[4][5][6]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவுத்ரி_மகபூப்_அலி&oldid=3742022" இலிருந்து மீள்விக்கப்பட்டது