சவுத்ரி முகமது அக்ரம்

சவுத்ரி முகமது அக்ரம் (Choudhary Mohammad Akram; பிறப்பு 1962) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுரன்கோட் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2014 சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2024 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]

இளமை

தொகு

அக்ரம் சம்மு காசுமீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள லசானா கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் மறைந்த அசலம் சவுத்ரி முகமது அசலமின் மகன் ஆவார். 1991ஆம் ஆண்டில் சிறிநகரில் உள்ள மண்டலப் பொறியியல் கல்லூரியில் குடிமைப் பொறியியல் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றார்.[3]

அரசியல்

தொகு

அக்ரம் 2014 சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் சுரன்கோட் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 30,584 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் முசுதக் அகமது சாவினைத் 8,064 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5][6] 2024 சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக 34,201 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரசின் முகமது சாநவாசை 8,551 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Pahari-Gujjar divide in first battle for Jammu ST seats; BJP, INDIA play role reversal". The Indian Express (in ஆங்கிலம்). 2024-09-14. பார்க்கப்பட்ட நாள் 2024-09-16.
  2. "Surankote Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-23.
  3. "Ch Mohd Akram(Indian National Congress(INC)):Constituency- SURANKOTE(POONCH) - Affidavit Information of Candidate:". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2024-09-16.
  4. PTI. "Jammu and Kashmir Assembly Elections 2024: BJP state chief faces uphill task against former party colleague in Nowshera". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-16.
  5. "Jammu and Kashmir Assembly election winners list". India Today (in ஆங்கிலம்). 2014-12-23. பார்க்கப்பட்ட நாள் 2024-09-16.
  6. The Times of India. "6 Independent MLAs may back NC, taking it to magic no. of 48". https://timesofindia.indiatimes.com/india/6-independent-mlas-may-back-nc-taking-it-to-magic-no-of-48/articleshow/114097379.cms. 
  7. "Surankote (ST) Assembly Election Results 2024: Surankote (ST) Election Candidates List, Election Date, Vote Share - IndiaToday". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவுத்ரி_முகமது_அக்ரம்&oldid=4130643" இலிருந்து மீள்விக்கப்பட்டது