சவ் கெய் வான்

சவ் கெய் வான் (Shau Kei Wan) அல்லது சவ்கெய்வான் என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவு பகுதியின் கிழக்கு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது சய் வான் நகருக்கு அன்மையில் உள்ள ஒரு நகராகும். இன்று ஹொங்கொங்கில் மக்கள் அடர்த்திமிக்க நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.

சவ் கெய் வான் நகரக் காட்சி
சவ் கெய் வான் நகரத்தின் ஒருபக்கக் காட்சி

வரலாறு

தொகு

சவ் கெய் வான் நகரப் பகுதி 18ம் நூற்றாண்டுகளின் உள்ளூர் மீனவர்கள், ஹொங்கொங்கில் அடிக்கடி வீசும் தைப்பூன் சூறாவளி காற்றின் போது பாதுகாப்பாக இருக்ககூடிய இடமென கண்டுபிடிக்கப்பட்டு படிப்படியாக குடியேறத்தொடங்கியுள்ளனர். 1841 ஆம் ஆண்டளவில் பிரித்தானியர் ஹொங்கொங்கை கைப்பற்றிய காலப்பகுதியின் கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 200 பேர் மட்டுமே இருந்துள்ளனர். கடலோரங்களில் மீனவக் குடில்களும், மீன்ப்பிடி படகுகளும் மட்டுமே அப்போது காணப்பட்டுள்ளன. 1860களில் கடற்கொள்ளையர்களால் இப்பகுதி தாக்குதல்களுக்கும் உள்ளானது. அப்போதைய ஆளுநரான ரிட்சட் கிரேவ் மெக்டொனெல் என்பவரால் அத்தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் காவல் துறை காப்பகம் ஒன்றையும் நிறுவி கடல் கொள்ளையருக்கு எதிரான சிறந்த பாதுக்காப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் அப்பகுதி பாதுகாப்பான பகுதியாக மாற்றம் பெறத்தொடங்கியது.

1911ல் சவ் கெய் வான் பகுதியின் மக்கள் தொகை 7,000 ஆக அதிகரித்தது. 1920களில் இப்பகுதி ஒரு தொழில் பேட்டையாக மாற்றம் பெற்றது. முதல் தொழிற்சாலையாக மின்விளக்கு உற்பத்தி நிலையம் இப்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து படிப்படியாக மீன்வணிகத்துறையாக வளர்ச்சிப் பெற்றது.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் சீன பெருநிலப்பரப்பில் இருந்து பெருந்திரளான மக்கள் அதிகளாக ஹொங்கொங்கில் வந்து குவிந்த மக்களில், குறிப்பிட்டத் தொகையானோர் இந்த சவ் கெய் வான் பகுதியிலும் வந்து குவிந்தனர். இந்த அகதிகளின் வருகையானது சவ் கெய் வான் மலையடிவாரத்தில் 13 மலைக்கிராமங்களை தோற்றுவித்தது. அந்த கிராமங்களில் அதிகமானவை சேரிகளாகவும், சேரி வீடுகளாகவுமே இருந்தன. அம்மக்களின் உடல்நலக் கேடுகளும் தொடர்ச்சியாக ஏற்பட்டன. 1960களில் ஹொங்கொங் அரசாங்கம் மீண்டும் ஒரு மீள்திட்டமிடலை இந்த நிலப்பரப்பில் ஏற்படுத்தி, பொது மக்களுக்கான வசிப்பிடத் தொகுதிகளையும் கட்டத்தொடங்கியது. இத்திட்டங்கள் 1983கள் வரை தொடர்ந்த வண்ணம் இருந்தது. இருப்பினும் அக்காலப்பகுதியில் ஏற்பட்ட ஒரு பாரிய தீயணர்த்தம் அப்பகுதியில் உள்ள கடலோரச் சேரி வீடுகளை எல்லாம் தீக்கிரையாக்கியது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சேரி வீடுகளையெல்லாம் அரசாங்கம் புல்டோசர் போட்டு தரைமட்டமாக்கியதுடன், புதிய வசதிகளுடன் கூடிய மக்கள் வசிப்பிடத் தொகுதிகளை கட்டியது.

இன்று

தொகு

இன்று சவ் கெய் வான் பகுதி மக்கள் தொகை அதிகமான பகுதிகளில் ஒன்றாகியது. 19ம் நூற்றாண்டில் இந்த சவ் கெய் வான் கடலோரப் பகுதி மிகவும் சிறப்பான ஒரு மக்கள் வசிப்பிடப் பகுதியாக மாற்றம் பெற்றது.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Shau Kei Wan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவ்_கெய்_வான்&oldid=2768267" இலிருந்து மீள்விக்கப்பட்டது