சாகித்தி பிங்காலி
சாகித்தி பிங்காலி (Sahithi Pingali) என்பவர் கர்நாடக மாநிலத்தின் பெங்களுருவைச் சேர்ந்த மாணவி ஆவார். ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்சு மாகாணத்தில் உள்ள கேம்பிரிட்சு நகரில் அமைந்துள்ள மாசசூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் சாகித்தி பிங்காலியின் ஒட்டுமொத்த இரண்டாம் இடத்தைப் பாராட்டும் விதமாக பால் வெளியில் உள்ள ஒரு சிறிய கோள் ஒன்றிற்கு சாகித்தி பிங்காலியின் பெயரைச் சூட்டியுள்ளது.
சாகித்தி பிங்காலி பெங்களூரு இன்வென்சர் அகாதெமியில் பயின்றவர். இவர் இன்டெல் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் (ISEF) "நன்னீர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மாசுபாட்டைக் கண்காணிப்பதற்கு பலவித சேவைகளைப் இணைய உதவியோடு பெறும் முறையைப் (crowdsourcing) பயன்படுத்தும் ஒரு புதுமையான அணுகுமுறை" (An Innovative Crowdsourcing Approach to Monitoring Freshwater Bodies) என்ற தனது ஆய்வறிக்கையைப் பதிவு செய்திருந்தார். இன்டெல் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியானது உலக அளவிலான கல்லுாரிக்குச் செல்வதற்கு முன் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கான பெருமைமிகு கண்காட்சியாகும். இந்தப் போட்டியில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற 2000 நபர்களில் சாகித்தி பிங்காலியும் ஒருவர். இவர் இந்தப் போட்டியின் இறுதியில் முதல் 3 விழுக்காடு வெற்றியாளர்களில் ஒருவராகவும், புவி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவில் ஒட்டுமொத்த இரண்டாம் இடத்தையும் பெற்றார்.[1]
விருதுகள்
தொகுஇந்த ஆண்டு தொடக்கத்தில் ஐக்கிய அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த ISWEEEP (International Sustainable World Engineering Energy Environmental Project - சர்வதேச வளங்குறையா உலக பொறியியல் ஆற்றல் சுற்றுச்சூழல் திட்டம்) அமைப்பால் நடத்தப்பட்ட ஒலிம்பியாட் போட்டியில் வர்துார் ஏரி தொடர்பாான ஆய்வறிக்கைக்காக தங்கப் பதக்கம் கிடைத்தது. கடந்த ஆண்டு புனேயில் நடைபெற்ற ஐஆர்ஐஎஸ் அறிவியல் கண்காட்சியில் வளரும் நாடுகளில் ஏரிகளைக் கண்காணிப்பதற்கான புதிய அணுகுமுறை என்ற தலைப்பிலான ஆய்வறிக்கைக்கு மிகச்சிறந்த விருதினைப் பெற்றார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bengaluru girl to get a minor planet named after her". Staff Reporter. The Hindu. 07 June 2017. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "From Bengaluru to the Milky Way—how this 12th grader got a planet named after her". Your Story. 07 June 2017. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)