சாகிர் அல்லது ஜாகிர் (Jagir) என்பது முன்னாளில், இந்தியாவிலும், பாகிசுத்தானிலும், ஆட்சியாளர்களால் படைத்தலைவர்களின் சேவை கருதி அவர்களுக்கு வழங்கப்படும் சிறிய ஆட்சிப் பகுதியைக் குறிக்கும். பொதுவாகக் குறுகிய காலத்துக்கு வழங்கப்படும் இக் கொடை குறித்த படைத்தலைவர்களின் வாழ்வுக்காலத்துக்கு மட்டுப்படுத்தப் பட்டிருக்கும். இக் கொடையைப் பெற்றுக்கொண்டவர் "சாகிர்தார்" எனப்படுவார். சாகிர்தார்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பகுதியின் ஆட்சியாளராகவே செயற்படுவர். இப் பகுதியிலிருந்து வரி முதலியவற்றின் மூலம் பெறப்படும் வருமானம் சாகிர்தார்களின் குடும்பச் செலவுகளுக்காகவும் அவர்களது படைகளைப் பேணவும் பயன்படும். சாகிர்தார்கள் தில்லியில் உள்ள அரசவையிலேயே இருப்பதுடன், நாளுக்கு இரண்டு தடவைகள் பேரரசருக்கு முன் தோன்றுவர்.

அக்காலச் சட்டங்களுக்கு அமைய சாகிர்கள் அவை வழங்கப்பட்டவர் இறந்த பின்னர் மீண்டும் பேரரசரினால் திருப்பி எடுக்கப்பட்டுவிடும். அதன் பின்னர் அதனை மீண்டும் முன்னைய சாகிர்தாரின் வாரிசுக்கு அல்லது வாரிசுக்களுக்கு வழங்குவதா அல்லது அவருடன் தொடர்பற்ற இன்னொருவருக்கு வழங்குவதா என்பதைப் பற்றி பேரரசரே முடிவெடுப்பார். பொதுவான நடைமுறைப்படி சாகிர்கள் தலைமுறை ஆளுகைக்கே உட்பட்டிருந்தன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகிர்&oldid=4049562" இலிருந்து மீள்விக்கப்பட்டது