சாகீர் உசைன் (இசைக் கலைஞர்)

ஜாகீர் ஹூசைன் (ஆங்கிலம்: Zakir Hussain இந்தி : ज़ाकिर हुसैन) (9 மார்ச் 1951) இந்தியாவைச் சேர்ந்த தபேலா இசைக் கலைஞர் ஆவார். இவர் தபேலா இசைக் கலைஞர் அல்லா ரக்காவின் மகனாவார்.[1] இவர் இசையமைப்பாளராகவும் மற்றும் நடிகராகவும் அறியப்படுகிறார். இவர் மும்பையில் பிறந்தவர் ஆவார். தனது ஏழாவது வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கினார். 1970 ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்கா சென்றார். ஆண்டிற்கு 150 இசை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியுள்ளார்.[2]

ஜாகீர் ஹூசைன்
Ustad Zakir Hussain 1.jpg
ஜாகீர் ஹூசைன்
பிறப்பு9 மார்ச்சு 1951 (1951-03-09) (அகவை 70)
செயற்பாட்டுக்
காலம்
1963 முதல் இன்று வரை
வலைத்தளம்
www.zakirhussain.com

கௌரவம்தொகு

1996இல் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் திரைப்படத்தில் இடம்பெற்ற "டெலிஃபோன் மணிபோல்" எனத் தொடங்கும் தமிழ் பாடலில் "ஜாகீர் ஹூசைன் தபேளா இவள்தானா" என்கின்ற வரி இவரை பெருமைப் படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இப்பாடலை எழுதியவர் கவிஞர் வைரமுத்து.

விருதுகள்தொகு

மேற்கோள்கள்தொகு