சாக்கா சூலு

சாக்கா கசென்சங்ககோனா (Shaka kaSenzangakhona) (1787 – 22 செப்டம்பர் 1828), பரவலாக சாக்கா[1] சூலு, சூலு இராச்சியத்தின் மிகவும் தாக்கமேற்படுத்திய ஓர் தலைவர் ஆவார்.

சாக்கா சூலு
சாக்காவின் ஒரே அறியப்பட்ட ஓவியம்—தனது இறப்புக்கு 4 ஆண்டுகள் முன்பு 1824ஆம் ஆண்டில் ஈட்டி,கவசங்களுடன்
பிறப்புc. 1787
குவாசூலு-நேட்டால், மெல்மோத் அருகே
இறப்பு22 செப்டம்பர் 1828 [சான்று தேவை](அகவை 41)
இறப்பிற்கான
காரணம்
கொலை
கல்லறைஸ்ட்ரேஞ்சர், தென்னாபிரிக்கா
சமயம்சூலு
பெற்றோர்சென்சங்ககோனா (தந்தை)
நந்தி (தாய்)
பிள்ளைகள்தகவலில்லை

போங்கோலோ ஆற்றிற்கும் சிம்குலு ஆற்றிற்கும் இடைப்பட்ட தெற்கு ஆபிரிக்காவின் பெரும்பகுதியை ஆளத் துவங்கிய சூலு இராச்சியத்தை, வடக்கு இங்குனி மக்களை ஒற்றுமைப்படுத்தி உருவாக்கியப் பெருமை இவருக்குண்டு. இவரது வீரமும் விவேகமும் சூலு தலைவர்களில் மிகப் பெரும் தலைவராக இவரை சுட்டுகிறது.[2] இவருடைய சீர்திருத்தங்கள், புதுமைகள் சிறந்த இராணுவ தலைவராகக் காட்டினாலும் கொடுங்கோல் ஆட்சிப் புரிந்ததாக கண்டனங்களும் உண்டு.[3][4] மேலும் சில வரலாற்றாளர்கள் இவரது ஒருங்கிணைத்த சூலு இராச்சியம் முந்தைய சூலு பரம்பரை அமைப்புகளைச் சிதைத்ததாகவும் ஆதிகாரங்களை மையப்படுத்தியதாகவும் பண்பாட்டிலிருந்து விலகியதாகவும் குறை காண்கின்றனர். [5] தென்னாபிரிக்காவின் வரலாற்றில் பெரும் தாக்கமேற்படுத்தியுள்ள இவ்வீரரின் குணங்களும், முறைகளும் பல ஆராய்ச்சிகளின் கருவாக உள்ளது.

கௌரவம்

தொகு

2010 உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டினை யொட்டி டர்பனில் லா மெர்சியில் திறக்கப்பட்டுள்ள புதிய வானூர்தி நிலையத்திற்கு இரண்டாண்டுகள் நீண்ட விவாதத்திற்குப் பிறகு சாக்காவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Sometimes spelled Tshaka, Tchaka or Chaka
  2. Omer-Cooper, J. D. (1965) "The Zulu Aftermath," London: Longman, pp. 12–86
  3. See பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் article (Macropaedia Article "Shaka" 1974 ed.)
  4. Morris, pp. 17–69
  5. Hamilton, Carolyn (1998) "Terrific Majesty: the Powers of Shaka Zulu and the Limits of Historical Invention," Cambridge MA: Harvard University Press, pp. 5–34

வெளியிணைப்புகள்

தொகு
சூலு இராச்சியத்தின் மன்னர்கள்
முன்னவர்:
சென்சங்ககோனா
ஆட்சி
1816–1828
பின்னவர்:
டிங்கான்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்கா_சூலு&oldid=3367031" இலிருந்து மீள்விக்கப்பட்டது