சாங் ஆறு (Song River) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆறாகும், இது உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள தூன் பள்ளத்தாக்கின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் பாய்கிறது. இது கங்கையின் துணை ஆறான சூசுவா ஆற்றின் துணை ஆறாகும். இது இமயமலைத் தொடரின் முசோரி மலையின் ராடி டாப் தெற்கு சரிவுகளில் நீரூற்றால் ஊட்டப்பட்ட நீரோடையாக உருவாகி தனௌல்டியிலிருந்து நரேந்திரநகர் நோக்கி ஓடுகிறது.[1] மலைகளிலிருந்து தெற்கே ஓடும் பல நீரோடைகள் சஹஸ்த்ரதாராவிற்குப் ஒன்றிணைந்து ஓடுகின்றன.

சாங் ஆறு, ராய்ப்பூரில்

தூன் பள்ளத்தாக்கை 190 km (120 mi) கடந்து செல்லும் மிகப்பெரிய ஆறுகளில் சாங் ஆறும் ஒன்றாகும். இதன் துணை ஆறுகளில் காளி காட், பிண்டல் ஆறு மற்றும் ரிசுபானா ஆறு ஆகியவை அடங்கும்.

சஹசுத்ரதாரா

தொகு

காளி காட் என்ற சாங் ஆற்றின் துணை ஆறு அடிப்படையாகக் கொண்டு, இயற்கை ஆர்வலர்களுக்கு இது ஒரு பிரபலமான இயற்கை வளமிக்க இடமாகும். இங்குள்ள கந்தக நீரூற்றுகளுக்காக இந்தப் பகுதி மிகவும் பிரபலமானது. கோடையில் குடும்பத்துடன் சுற்றுலாப் பயணிகளின் தேர்வாக இந்த இடம் உள்ளது.

நீரியல்

தொகு

காளி காட் கலிங்க மலைக்குக் கிழக்கே பிரதான சாங் ஆற்றுடன் கலக்கிறது. இந்த சங்கமத்திற்குப் பிறகு, சாங் ஆறு ஒரு பரந்த ஆறாக இப்பள்ளத்தாக்கில் பாய்கிறது. இதன் மேற்குப் பகுதி அசன் ஆற்றை விட பெரியது. சாங் ஆறு பள்ளத்தாக்கு வழியாகக் தென்கிழக்கு திசையில் ஹர்ரவாலா மற்றும் தொய்வாலா பகுதி வழியாகப் பாய்கிறது. இது ஒரு வற்றாத ஆறாகும். இருப்பினும் மழைக்காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை தொய்வாலாவில் உள்ள பாலத்திலிருந்து பார்க்க முடியும். சூசுவா ஆற்றுடன் கலக்கும் வரை இந்த ஆறு தெற்கு நோக்கிச் செல்கிறது.

சூசுவா, தெற்கு சிவாலிக் மலையிலிருந்து தூன் பள்ளத்தாக்கை சஹாரன்பூர் மாவட்டம் மற்றும் அரித்வார் மாவட்டத்திலிருந்து பிரிக்கிறது. முன்பு வற்றாத ரிசுபானா உட்படப் பல சிறிய நீரோடைகளிலிருந்து தண்ணீரைச் சேகரிக்கிறது. இது மேற்கு நோக்கிப் பாய்ந்து தொய்வாலா வரை செல்கிறது. அரித்வாரிலிருந்து தேராதூனுக்கு ஓடும் தொடருந்திலிருந்து அடர்ந்த காடு வழியாகப் பாயும் இந்த ஆற்றினைப் பார்க்க முடியும். இந்த ஆறு ரைவாலாவில் கங்கையுடன் சங்கமிப்பதற்கு முன்பு கன்ஸ்ராவ் காடு வழியாகப் பாய்கிறது.

நீர்ப்பாசனம்

தொகு

தேராதூனின் பல்வேறு விவசாயப் பகுதிகளின் நீர்ப்பாசனத் துறையில் சாங் ஆற்றிற்கு பெரும் பங்கு உண்டு. ராய்ப்பூரின் விவசாயப் பகுதிக்கு நீர்ப்பாசனம் செய்வதற்காக மால்தேவ்தாவின் கலிங்கா ஆற்றிலிருந்து 18ஆம் நூற்றாண்டில் ஒரு கால்வாய் கட்டப்பட்டது. பலவாலா, நாதுவாலா, நக்ரோண்டா, குலர்காட்டி, ஹர்ரவாலா மற்றும் ரஞ்சவாலா ஆகிய பகுதிகள் இந்த நீர்ப்பாசன கால்வாயினால் பயனடைகின்றன. தொய்வாலாவின் விவசாயப் பகுதிக்கு நீர்ப்பாசனம் செய்வதற்காக லச்சிவாலாவில் உள்ள இந்த ஆற்றிலிருந்து பல்வேறு கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன. பனியவாலா, ஜாலி கிராண்ட், படோவாலா ஆகிய பகுதிகள் இந்த நீர்ப்பாசன கால்வாய் அமைப்பால் பயனடைகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Sharad Singh Negi (1991). Himalayan Rivers, Lakes, and Glaciers. Indus Publishing. pp. 117, 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85182-61-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்_ஆறு&oldid=3392535" இலிருந்து மீள்விக்கப்பட்டது