சாணி வண்டு
சாணி வண்டு | |
---|---|
Scarabaeus viettei (syn. Madateuchus viettei, Scarabaeidae) in dry spiny forest close to Mangily, western Madagascar | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
பெருங்குடும்பம்: |
சாணி வண்டு (Dung beetle) என்பது ஒரு வண்டினமாகும். இவை ஆப்பிரிக்கா முதல் அண்டார்டிகா வரையும் வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.[1] இவ்வண்டு விலங்குகளின் சாணத்தை உண்டு வாழ்கின்றது. சிறிய வண்டுகள் சாணக்குவியலுக்குள் புகுந்து அச்சாணக்குவியல் தீரும்வரை அங்கேயே தங்கி வாழும். இவ்வண்டில் 5,000 இனங்களுக்கு மேல் உண்டு.[2]
தோற்றம்
தொகுஇது ஒரு மிமீ முதல் மூன்று செ.மீ வரை என பல அளவுகளில் காணப்படுகின்றது. இதன் வடிவம் ஏறக்குறைய தென்னை மரத்தின் குருத்துகளை குடைந்து நாசம் செய்யும் காண்டாமிருக வண்டினை ஒத்திருக்கும். கருமை நிறமுடையது. முன்பகுதி அரைவட்டவடிவில் மண்வெட்டி போன்ற அமைப்பு காணப்படுகிறது. அதன் முன்னங்கால்கள் குட்டையாகவும் பின்னங்கால்கள் நீண்டும் காணப்படும்.
இயல்புகள்
தொகுமண்வெட்டி போன்ற அமைப்பின் மூலம் சாணத்தின் ஒரு பகுதியை வெட்டி பிரித்து எடுக்கவும் பூமியில் பள்ளம் தோண்டவும் முடியும். சாண வண்டுகளுக்கு மோப்ப சக்தி அதிகம். யானை, மாடு போன்ற விலங்குகள் சாணம் போட்டவுடன் அதிலிருந்து வரும் மணம் காற்றில் பரவியவுடன் சாண வண்டுகள் கூட்டமாக வந்து சாணத்தை மொய்த்து கொள்ளும். இனப்பெருக்கத்திற்கு தயாராக இருக்கும் பெண் வண்டுகள் சாணத்தை உருட்டி பந்து போல் செய்து முன் கால்களை முன் பக்கம் ஊன்றிக்கொண்டு பின்னங்கால்களால் சாண உருண்டையை உருட்டிச் செல்லும். அவை தன் எடையைப்போல் 50 மடங்கு எடையை நகர்த்திச் செல்லும் வலிமையுடையது. அவ்வாறு உருட்டிச் செல்லும் சாண உருண்டைகளை ஈரமான இடத்தைத் தேர்ந்தெடுத்து பின்னங்கால்களால் தாங்கியபடி முன்னங்கால்களால் பூமியில் குழி தோண்டிகொண்டு நுழையும். சாண உருண்டையும் குழிக்குள் வந்து சேரும். வெளியேற்றப்பட்ட மண்குழியை மூடிகொள்ளும். நாளொன்றுக்கு ஒரு வண்டு தனது எடையைப் போல 250 மடங்கு அதிகமான சாணத்தை அல்லது மலத்தை மண்ணுக்குள் அனுப்புகின்றது.
இனப்பெருக்கம்
தொகுவண்டு சாண உருண்டையின் மீது முட்டையிடும். பின் வெளியேறி விடும். முட்டை குஞ்சு பொரித்து சாண உருண்டையை உண்டு வளரும். முழுவளர்ச்சி அடைந்தவுடன் வெளியேறிவிடும். மழை பெய்து பூமி ஈரமாக உள்ள காலங்களில் மட்டுமே வண்டுகள் இனப்பெருக்கத்தில் ஈடுபட முடியும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ பாமயன் (11 ஆகத்து 2018). "சாண வண்டுகள் சாலச் சிறந்தவை". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 ஆகத்து 2018.
- ↑ Frolov, A.V. "Subfamily Scarabaeinae: atlas of representatives of the tribes (Scarabaeidae)". Retrieved on 2007-08-02.
வெளி இணைப்புக்கள்
தொகு- உயிருள்ள இயந்திரம் சாணி வண்டுகளினால் ஏற்படும் நன்மைகள் குறித்து. பாமயன்
- `சாண வண்டுகளின் நுட்பமான நகர்வு முறை வாகனத் தொழில்நுட்பத்தில் உதவலாம்'
- Feature: 'What to do with too much poo' பரணிடப்பட்டது 2012-11-05 at the வந்தவழி இயந்திரம் – The success story behind the introduction of dung beetles in Australia at cosmosmagazine.com
- Beetles as religious symbols பரணிடப்பட்டது 2016-10-18 at the வந்தவழி இயந்திரம் at insects.org
- Scarabaeinae Research Network பரணிடப்பட்டது 2019-01-22 at the வந்தவழி இயந்திரம்
- Dung beetles at the Australia Museum
- Catharsius, an international group working on taxonomy and ecology of Western African dung beetles
- Tomas Libich, Congo dung beetle sp1 and Congo dung beetle sp2 photos
- Dung Beetles in action (video) பரணிடப்பட்டது 2013-04-16 at Archive.today by The WILD Foundation/Boyd Norton
- Dung Beetles in New Zealand (proposed release of dung beetles, with background research)
- Marcus Byrne The dance of the dung beetle Ted conference about dung beetle behavior.