சாதா உழவாரன்

பறவை இனம்
தரையிலான் குருவி
Common Swift
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Apus
இனம்:
A. apus
இருசொற் பெயரீடு
Apus apus
(L. 1758)
Common Swift range

சாதா உழவாரன் அல்லது தரையிலான் குருவி (Apus apus, "Common swift") என்பது சிறிய கால்களை உடைய வெகுதொலைவு பறக்கும் குருவி ஆகும். இது தானாக விரும்பி நிலத்தில் அமர்வதே இல்லை. மிக அரிதாக சில மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும். மேலும் இப்பறவையால் பறந்து கொண்டே தூங்கவும் இனப்பெருக்கம் செய்யவும் இயலும். இது ஓய்வின்றிப் பத்து மாதங்கள் தொடர்த்து பறக்க வல்லது.

சாதா உழவாரன் அதிகபட்சமாக வினாடிக்கு 31 மீட்டர் (112 km/h; 70 mph) வேகத்தில் பயணிக்க முடியும். ஒரு ஆண்டில் சாதா உழவாரன் குறைந்தது 200,000 கிமீ தொலைவு பயணிக்கும்.[1] மேலும் வாழ்நாளில் சுமார் இரண்டு மில்லியன் கிலோமீட்டர்களை கடக்கும்; அது சந்திரனுக்குப் பறந்து ஐந்து முறை திரும்பிச் வருவதற்கு இணையானது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Piper, Ross (2007), Extraordinary Animals: An Encyclopedia of Curious and Unusual Animals, Greenwood Press,
  2. Rundell, Katherine (August 15, 2019). "Consider the Swift". London Review of Books.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதா_உழவாரன்&oldid=4098727" இலிருந்து மீள்விக்கப்பட்டது