சாது கொச்சுகுஞ்சு உபதேசியார்

இந்திய கிறித்தவ தலைவர்

சாது கொச்சுகுஞ்சு உபதேசியார் ( மலையாளம்: സാധു കൊച്ചൂഞ്ഞ് ഉപദേശി  ; 1883 - 30 நவம்பர் 1945) என்பவர் ஒரு பிரபல மலையாளி கிறித்தவ போதகர், கவிஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். கொச்சுகுஞ்சு தோற்றத்தில் மிகவும் தனித்துவமான நபர். இவர் எப்போதும் ஒரு வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை வேட்டி அணிந்திருப்பார். இவர் சுமார் 175   செ.மீ உயரம் கொண்டவராகவும், மிகவும் மெல்லிய, பலவீனமான உடலைக் கொண்டவராகவும், குழிவிழுந்த கண்களைக் கொண்டவராகவும் இருந்தார். அவர் எங்கு சென்றாலும் எப்போதும் ஒரு குடையையும் பைபிளையும் எடுத்துச் செல்வார். அவரது துறவு வாழ்க்கை, சுய கட்டுப்பாடு, சுய மறுப்பு, சமூக பிரச்சினைகள் மீதான ஈடுபாடு ஆகியவை இவரை ஒரு தனித்துவமான நபராக காட்டின. இவர் பைபிளுடன் தனிமையில் நேரத்தை செலவிட விரும்பினார், இவருக்கு பைபிள் படிக்க வேண்டிய புத்தகம் மட்டும் அல்ல, அன்றாட வாழ்க்கையில் பின்பற்றப்பட வேண்டிய ஒரு போதனை நூல். இவரது பெரும்பாலான நேரத்தை வாசிப்பில் செலவிட்டார். [1]

முத்ம்பக்கல் "சாது" கொச்சுகுஞ்சு உபதேசியார்
Muthampackal Kochoonju.jpg
பிறப்புகொச்சுகுஞ்சு
1883
திருவாங்கூர், ஆறன்முளா அருகில் உள்ள எடயரன்முளா
இறப்பு30 நவ 1945
கல்லறை
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்எம். ஐ. வர்கீஸ்
பணிசமயபரப்புநர்.
அறியப்படுவதுகிறித்தவ கவிஞர், இசையமைப்பாளர்
பெற்றோர்இட்டே மற்றும் மரியம்மா
வாழ்க்கைத்
துணை
அலியம்மா

இவரது வாழ்நாளில் இவர் கொச்சுகுஞ்சு என்று அழைக்கப்பட்டார், இது கொச்சு மற்றும் குஞ்சு ஆகிய இரண்டு மலையாள சொற்களின் சேர்கையாகும். போதகர் என்ற சொல்லுக்கு இணையான மலையாள சொல்லான உபதேசி என்பதாகும். தமிழ்நாட்டில் இவரது சமயப்பரப்பாளர் பணியின் போது, அவர்கள் இவரை துறவி என்ற பொருள் கொண்ட சாது என்ற பெயரால் அழைத்தனர். இதனால் இவர் சாது கொச்சுகுஞ்சு உபதேசியார் என்று அறியப்பட்டார்.

பிறப்பு மற்றும் குடும்ப வாழ்க்கைதொகு

கேரளத்தின், பத்தனம்திட்டா மாவட்டம், ஆறன்முளா அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் எடயரன்முளா ஆகும். இவர் இந்த கிராமத்தில் 1883 நவம்பர் 29 அன்று பிறந்தார். இவரது தந்தை மூத்தம்பக்கல் இட்டி, இவரது தாயார் பெரெங்கட்டு பாடிக்கலின் மரியம்மா ஆகியோராவர். இவரது செல்லப் பெயர் கொச்சுகுஞ்சு என்பதாகும். இவரது இயற்பெயர் எம். ஐ. வர்கீஸ் (முத்தம்பக்கல் இட்டி வர்கீஸ்). இவர் ஆறு சகோதரிகள் கொண்ட ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு ஒரு சகோதரன் இருந்தான், அவன் இரண்டு வயதில் இறந்தான்.

குழந்தை திருமணம் வழக்கமான நடைமுறையாக இருந்த அந்தக் காலத்தில் சாது கொச்சுகுஞ்சு உபதேசிக்கு 12 வயதில் திருமணம் நடந்தது. அவரது மனைவியின் பெயர் அலியம்மா. கொச்சு குஞ்சுக்கு ஆதவராக அவர் இருந்தார். அவர் ஒரு விவசாயியாக வேலை செய்வது அதன் மூலமும், வயலின் கிடைக்கும் விளைச்சலில் வரும் வருவாயைக்கொண்டு விற்பனை செய்வதன் வாழ்கையை நடத்தினர்.

கல்வி மற்றும் ஆரம்ப வாழ்க்கைதொகு

இவர் அருகிலுள்ள மார் தோமா லோயர் துவக்கப் பள்ளியில் சேர்ந்தார். இவர் தன் 12 வயதில் 1895 ஆம் ஆண்டு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த அலியம்மாவை மணந்தார். இதற்காக இவரது வகுப்பு தோழர்கள் இவரை கேலி செய்தனர், எனவே இவர் அந்த பள்ளியை விட்டு வெளியேறி ஒரு ஆங்கில வழிப் பள்ளியில் சேர்ந்தார். இவர் இங்கு பயின்றபோது ஆசிரியர்களில் ஒருவர் எந்த காரணமும் இல்லாமல் இவரை தண்டித்தார், எனவே கொச்சுக்குஞ்சு அவரை கேலி செய்யும்விதமாக ஒரு கவிதை எழுதினார். இதுவே இவர் எழுதிய முதல் கவிதை. இவர் ஒரு அறிவார்ந்த மாணவராக இருந்து வகுப்பில் முதலிடம் பிடித்தார்.   இவரது 14 வயதில், தன் தந்தைக்கு விவசாய வேலைகளில் உதவுவதற்காக முறைசார் கல்வியை கைவிட்டார்.

இவரது தாயார் 1898 ஆண்டு இவருக்கு 15 வயது ஆனபோது இறந்தார். ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த இவரது தந்தைக்கு அது ஒரு பேரிடியாகும். இவரது தந்தை 1903 ஆம் ஆண்டில் இவருக்கு 20 வயதானபோது இறந்தார். அவர் இறந்தபோது ஒரு சிறிய நிலத்தையும் கொஞ்சம் கடனையும் விட்டுச்சென்றார். விவசாய வருமானம் இவர்களின் வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. எனவே இவர் கடினமான வாழ்க்கையை வாழ்ந்தார். தேவைகளை நிறைவு செய்ய பல சிறிய வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவர் துணி வியாபாரம் செய்தார், சில காலம் ஒரு பள்ளியில் கற்பித்தார். இவரது மனைவியின் பெற்றோர் இவருக்கு மிகவும் உதவியாக இருந்தனர். இறுதியியில் விவசாய வேலையிலேயே முழுமையாக ஏற்றுக்கொண்டார்.

ஊழியத்தின் ஆரம்பம்தொகு

சாது கொச்சுக்குஞ்சு உபதேசி தனது 11 வயதில் இயேசுவை தனது தனிப்பட்ட மீட்பராக ஏற்றுக்கொண்டார். இவர் தனது 17 வயதில் ஊழியத்தில் ஈடுபட முடிவு செய்தார். துவக்கத்தில் இவர் தன் வேளாண் வேலைகள் முடித்தப் பிறகு இரவு நேரங்களில் சுவிசேஷத்தைப் பரப்பச் சென்றார். கேரளாவில் இந்திய சகோதரர்கள் இயக்கம் வேகம் பெற்றபோது, அந்த தேவாலயத்தில் சேர வேண்டாம் என்று சாது கொச்சுகுஞ்சு உபதேசி முடிவு செய்தார். அவர்களுடைய கோட்பாட்டை அவர் ஏற்றுக்கொண்ட போதிலும், அவர் இருந்த தேவாலயத்தோடு தங்குவதும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதும்தான் தனது நோக்கம் என்று இவர் உணர்ந்தார். இவர் தனது வாழ்வின் ஆதாரம் பிரார்த்தனை என்று கூறினார். இதில் இவர் தினமும் பல மணிநேரங்களை செலவிட்டார்.

அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்தொகு

துவக்கத்தில் இருந்தே இவர் தனது கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பள்ளி, பிரார்த்தனைக் குழு போன்றவற்றை ஏற்பாடு செய்தார். இவரது பாரிஷ் பாதிரியார் ரெவ் கே. வி. ஜாகோப் மற்றும் இவரது வகுப்பு தோழர் திரு கே. வி. சைமன் ஆகியோர் இவருக்கு வலுவாக ஆதரவாளித்தனர். அவர்கள் இருவரும் எடயர்முலா கிறிஸ்டியன் பெல்லோஷிப் (ஈ.சி.எஃப்), யூத் லீக், கிறிஸ்தவ பராமரிப்பு பிரிவுகள் ... போன்றவற்றை உருவாக்கினர்.

செயல்பாடு இல்லாத நம்பிக்கை இறப்பதைப் போன்றது என்று நம்பினார். ஆகவே, இவரது பிற்கால வாழ்க்கையில், வரதட்சணை எதிர்ப்பு இயக்கம், ஏழைக் குழந்தைகளுக்கான இலவச பள்ளி, சுவிசேஷகர்களைப் பயிற்றுவிப்பதற்கான பைபிள் பள்ளி, கூட்டங்களை நடத்துவதற்கான பிரார்த்தனை மண்டபம் போன்றவற்றை கோசஞ்சேரி - செங்கன்னூர் சாலையோரத்தில் அவரது நிலத்தில் அமைப்பதற்கு பாடுபட்டார்.

கொட்டாரக்கரைக்கு அருகிலுள்ள கலயபுரத்தில் இவர் பைபிள் வகுப்புகள் மற்றும் திறந்தவெளி கூட்டங்களைத் தொடங்கினார். அங்கு மக்கள் இவரது செய்திகளைக் கேட்க கூடினர். மரியாதைக்குரிய விதத்தில் அவர்கள் வெள்ளை உடை அணிந்தனர்.

ஊழியம்தொகு

கேரளத்தில் பல சமய பரப்பு இயக்கங்களுக்கு சாது கொச்சுக்குஞ்சு உபதேசி ஆதாரமாக இருந்தார். இவர் தனது நற்செய்திப் பிரசங்கங்களுக்கு கேரளம், தென்னிந்தியா மற்றும் இலங்கை முழுவதும் பயணம் செய்தார். இவருடைய எல்லா தேவைகளுக்கும் கடவுள்மீது நம்பிக்கை வைக்கும் பழக்கம் இவருக்கு இருந்தது. இவர் கடவுளிடமிருந்து வழிகாட்டுதலைத் தேடியதால் இவர் பல மணி நேரங்கள் ஜெபத்தில் செலவிட்டார். பெரிய கூட்டங்களில் பேசுவதன் மூலம் சுவிசேஷத்தைப் பரப்புவதே இவரது முக்கிய வழி முறையாக இருந்தது. இவர் சுமார் 30 ஆண்டுகள் தீவிர நற்செய்திப் பணிகளைச் செய்தார். இது இவரது ஈடுபாட்டுக்கு ஒரு சான்றாகும். இவர் ஆன்மீக விஷயங்களைப் பற்றி மட்டுமல்லாமல், மன உறுதி இன்மை, சமய உரிமை போன்றவற்றிற்கு காரணமாகக் கூறப்படும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றியும் பேசினார்.

சாது கொச்சுகுஞ்சு உபதேசியின் உரைகள் வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை இரசித்தனர். இவர் தனது உரைகளை சுவைமிக்கதாக செய்ய பலவிதமான கதைகள், எடுத்துக்காட்டுகள், அனுபவங்கள், நகைச்சுவை ஆகியவற்றை தனது நற்செய்திக் கூட்டங்களில் தாராளமாகப் பயன்படுத்தினார். சலிப்பான வாழ்கை வாழக்கூடிய மக்கள் இன்று புதிதாய் பிறந்தது போன்ற ஒரு அரவணைப்பை அனுபவத்தை அளிப்பதை இவர் விரும்பினார். இந்த கூட்டங்களில் இவர் தான் சொந்தமாக இசையமைத்த பாடல்களையும் சேர்த்துக்கொண்டார். பின்னர் இவரது திருத்தப்பட்ட பாடல்கள் பிரபலமாகியன. எனவே சாது கொச்சுகுஞ்சு உபதேசியாரின் ஊழியம் கேரளத்திலும் தென்னிந்தியாவிலும் பெரும் பலனை விளைவித்தது. இதன் முடிவுகள் என்னவென்றால், இவர் சொல்வதைக் கேட்க பலர் வந்தனர். இந்த கூட்டங்களில் கிறிஸ்துவை தங்கள் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டனர். இவரது கூட்டங்களுக்கு குடிகாரர்கள் வருவதும் அவர்கள் புதிய மனிதர்களாக திரும்பிச் செல்வதும் சாதாரண விசயமாக இருந்தது. இந்த மாற்றங்களில் பெரும்பாலானவை உண்மையானவை, கிறிஸ்துவிடம் தஞ்சமடைந்தவர்கள் தங்கள் விசுவாசத்தைப் பற்றிய புரிதலை தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டனர். இவ்வாறு கொச்சுகுஞ்சு ஊழியம் பெரும் வெற்றியைப் பெற்றது. இவரது செயல்முறையானது தென்னிந்தியாவின் பல பகுதிகளில் சமயபரப்புப் பணிகளுக்கு புத்துயிர் அளித்தது. இது பல எதிர்கால கிறிஸ்தவ பணிகளுக்கு கதவுகளைத் திறந்தது.

1915 ஆம் ஆண்டில், மார் தோமா பெருநகரமானது திருச்சபையின் அனைத்து கோவிற்பற்றுகளிலும் பிரசங்கிக்கவும் சுவிசேஷப் பணிகளைச் செய்யவும் இவருக்கு அங்கீகாரம் அளித்தது. 1930 களில் இவர் மிகவும் பரபரப்பான கால அட்டவணையைக் கொண்டிருந்தார், வழக்கமான இடைவெளியில் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை திருச்சபை மாநாடுகளை நடத்தினார். மீதமுள்ள நாட்களில் இவர் புத்தகங்களை வாசிப்பதற்கும் பிரார்த்தனை செய்வதற்கும் ஒதுக்கினார்.

மற்ற செயல்பாடுகள்தொகு

கொச்சகுஞ்சு உபதேசி 1924 முதல் 1945 வரை மார் தோமா தன்னார்வ சுவிசேஷகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தார். சில காலம் எடயரன்முலா ஆங்கில நடுநிலைப் பள்ளியின் மேலாளராகவும் இருந்தார்.

இறுதி நாட்கள்தொகு

தனது இரண்டாவது மகனின் மரணம், வறுமை, மனைவி மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு, தனது சொந்த வாழ்க்கையில் நோய் மற்றும் சமகால விசுவாசிகளிடையே உள்ள பல்வேறு வகையான கிறிஸ்தவ நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான உள்ளார்ந்த மோதல்கள் ஆகியவை இவருக்கு சுமையாக இருந்தன. இவர் தன்னை பூமியில் தற்காலிகமாக தங்கியவர் என்று கருதினார், இதனால் உலகக் கவலைகளிலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டார். மாயைகளை மறுக்கும் ஒரு வலுவான நம்பிக்கை இவருக்கு இருந்தது. கடவுள் மட்டுமே இவருடைய ஒரே, அடைக்கலம் மற்றும் நம்பிக்கை, இதுவே அவரின் பிரதான பலமாக இருந்தது. இது இவரது துன்பங்களைக் கடந்து செல்ல இவருக்கு உதவியது. இவரது தொடர்ச்சியான பயணங்களும் ஓயாத நற்செய்தி வேலைகளும் இவரை பல முறை நோய்வாய்ப்படுத்தின. 1945 நவம்பரில் இவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். 1945 நவம்பர் 30 வெள்ளிக்கிழமை காலை 8.45 மணியளவில் இவர் இறந்தார், மறுநாள் லக்கா செயின்ட் தாமஸ் மார் தோமா தேவாலய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது இறுதிச் சடங்கு இவருக்கு பெரிய மரியாதை அளிப்பதாக நடத்தப்பட்டது. இறுதிச் சடங்கில் இரண்டு ஆயர்கள், 100 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள், 40,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குறிப்புகள்தொகு

  1. Suviseha Senanyikal. Page 8.