இக்கட்டு (சதுரங்கம்)
சதுரங்கத்தில், இக்கட்டு அல்லது சாத்தியமான நகர்வற்ற நிலை (Stalemate) என்பது முற்றுகைக்காளாகாத வேளையில் ஒரு போட்டியாளரால் எந்தவோர் ஏற்றுக்கொள்ளக்கூடிய நகர்வையும் செய்ய முடியாத நிலை ஆகும்.[1] சாத்தியமான நகர்வற்ற நிலை ஏற்பட்டால் அப்போட்டி சமநிலையில் முடிவடையும்.[2] சதுரங்க விதிமுறைகளுள் சாத்தியமான நகர்வற்ற நிலையும் அடங்குகின்றது.
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
19ஆம் நூற்றாண்டிலேயே, சாத்தியமான நகர்வற்ற நிலை ஏற்பட்டால் போட்டி சமநிலையாக முடியும் எனும் விதி கொண்டு வரப்பட்டது.
சில சதுரங்க வகைகளில் சாத்தியமான நகர்வற்ற நிலையை ஏற்படுத்தும் நகர்வை மேற்கொள்ள முடியாது. முரண்சதுரங்கத்தில் சாத்தியமான நகர்வற்ற நிலை ஏற்பட்டால், அது சமநிலையாகக் கருதப்பட மாட்டாது.[3]
எளிய எடுத்துக்காட்டுகள்
தொகுஆட்டத்தினிறுதியில் சாத்தியமான நகர்வற்ற நிலை
தொகுஆனந்து எதிர் கிராம்னிக்கு
தொகுa | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
2007 உலகச் சதுரங்கப் போட்டியில் விசுவநாதன் ஆனந்துக்கும் விளாடிமிர் கிராம்னிக்குக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில், கறுப்பானது f5இலுள்ள காலாளைக் கைப்பற்றிச் சாத்தியமான நகர்வற்ற நிலையை ஏற்படுத்தியது (வேறு எந்தவொரு நகர்வும் கறுப்பைத் தோல்வியடையச் செய்யும்.).[4]
கோர்ச்னோய் எதிர் கார்ப்பொவு
தொகுa | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
1978 உலகப் போட்டியில் விக்டர் கோர்ச்னோய்க்கும் அனத்தோலி கார்ப்பொவுக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியின் 124ஆவது நகர்வில் சாத்தியமான நகர்வற்ற நிலை ஏற்பட்டது. இங்கே, வெள்ளை அமைச்சர் பயனற்றது. அதனால் a8ஐத் தனது தாக்குதலின் கீழ் வைத்திருக்கவோ a4இல் உள்ள கறுப்புக் காலாளைத் தாக்கவோ முடியாது. வெள்ளை அரசன் கறுப்புக் காலாளை நோக்கிச் சென்றால் கறுப்பு அரசன் a8இற்குச் சென்று கோட்டையை அமைத்து விடும். ஆனாலும் இரு போட்டியாளர்களும் ஒப்பந்தம் மூலம் போட்டியைச் சமநிலையாக்க முன்வரவில்லை. சாத்தியமான நகர்வற்ற நிலைக்கு கார்ப்பொவை உட்படுத்தியமை தனக்கு மகிழ்ச்சியைத் தந்ததாக விக்டர் கோர்ச்னோய் குறிப்பிட்டார்.[5]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ சாத்தியமான நகர்வற்ற நிலை (ஆங்கில மொழியில்)
- ↑ ["சாத்தியமான நகர்வற்ற நிலை (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-07-23. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22. சாத்தியமான நகர்வற்ற நிலை (ஆங்கில மொழியில்)]
- ↑ தற்கொலைச் சதுரங்க விதிகள் (ஆங்கில மொழியில்)
- ↑ விசுவநாதன் ஆனந்து எதிர் விளாடிமிர் கிராம்னிக்கு (ஆங்கில மொழியில்)
- ↑ விக்டர் கோர்ச்னோய் எதிர் அனத்தோலி கார்ப்பொவு (ஆங்கில மொழியில்)