சாந்தி தேவி
சாந்தி தேவி (Shanti Devi) (11.11.1926 - 27.12.1987) இந்தியாவின் தில்லியில் பிறந்த ஒரு பெண்.[1] தனது நான்காம் வயதில் சாந்தி தனது உண்மையான வீடு மதுராவில் இருப்பதாகத் தனது பெற்றோரிடம் கூறினார். பெற்றோர்கள் இதைக் கண்டித்தனர்.
பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் தனது கணவன் பெயர் கேதார்நாத் என்றும் தனது பெயர் லுக்தி தேவி என்றும் குழந்தை சாந்தி தேவி கூறினார். மேலும் ஒன்பது வருடங்களுக்கு முன்னால் தனது மகனைப் பெற்ற பத்தாவது நாளில் தான் மரணமடைந்ததாகவும் கூறினார்.
விசாரித்துப் பார்த்ததில் அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மையாக இருந்தது. இந்த விவரங்கள் அண்ணல் காந்தியடிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவர் இது குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார்.[2] விசாரணைக் குழுவினரோடு மதுரா சென்ற சாந்தி தேவி தனது முன்பிறவி உறவினர்கள் அனைவரையும் அடையாளம் காட்டினார். விசாரணை முடிவில் சாந்தி தேவி லுக்தி தேவியின் மறுபிறப்பு என்ற அறிக்கை அளிக்கப்பட்டது.[2]
சாந்தி தேவி தன் வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ளவில்லை. இயான் ஸ்டீவன்சன் உள்ளிட்ட பல மறுபிறவி ஆய்வாளர்கள் இவர் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர்.[3] [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ K. S. Rawat, T. Rivas (July 2005), "The Life Beyond: Through the eyes of Children who Claim to Remember Previous Lives", The Journal of Religion and Psychical Research, 28 (3): 126–136, archived from the original on 2012-05-25, பார்க்கப்பட்ட நாள் 2012-05-01
- ↑ 2.0 2.1 L. D. Gupta, N. R. Sharma, T. C. Mathur, An Inquiry into the Case of Shanti Devi, International Aryan League, Delhi, 1936
- ↑ Sture Lönnerstrand, Shanti Devi: En berättelse om reinkarnation. Stockholm 1994. English translation: I Have Lived Before: The True Story of the Reincarnation of Shanti Devi, Ozark Mountain Publishing, 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1886940037
- ↑ "After Life Death: fact or Fiction". Sunday Post (Kathmandu Post). 14 April 2002. http://www.nepalnews.com/contents/englishweekly/sundaypost/2002/apr/apr14/head.htm.[தொடர்பிழந்த இணைப்பு]