கால்வாய் தீவுகள்
(சானெல் தீவுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சானெல் தீவுகள் (Channel Islands, நோர்மன்: Îles d'la Manche, பிரெஞ்சு: Îles Anglo-Normandes அல்லது Îles de la Manche) என்பது ஆங்கிலேயக் கால்வாயில் நோர்மண்டியின் பிரெஞ்சுக் கரையில் அமைந்துள்ள ஒரு தீவுக்குழுமம் ஆகும். இத்தீவுகள் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் உள்ளது, ஆனாலும் இவை ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி அல்ல. சானெல் தீவுகள் கேர்ன்சி மற்றும் ஜேர்சி என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மக்கள் தொகை 160,000 ஆகும். கேர்ன்சியின் தலைநகர் சென் பீட்டர் போர்ட் (மக்கள் தொகை: 16,488), ஜேர்சியின் தலைநகர் சென் ஹெலியர் (மக்கள் தொகை: 28,310).
சானெல் தீவுகளில் கேர்ன்சி பகுதியில் அமைந்துள்ள முக்கிய தீவுகள் கேர்ன்சி, ஆல்டேர்னி, சார்க், ஹேர்ம் ஆகியனவாகும். இவற்றை விட ஜெத்தோ, பிரெக்கு, லீஹூ ஆகிய சிறிய தீவுகளும் உள்ளன.
வெளி இணைப்புகள்
தொகு- கேர்ன்சியின் அரசுகள்
- ஜேர்சியின் அரசுகள்
- சார்க் தீவின் ஆளுநர் பரணிடப்பட்டது 2019-09-15 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- Encyclopedia Britannica Vol. 5 (1951), Encyclopedia Britannica, Inc., Chicago - London - Toronto