சான்-டெனீ , ரீயூனியன்

சான்-டெனீ (Saint-Denis, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[sɛ̃.də.ni]) பிரான்சினால் வெளிநாட்டு நிருவாகப் பகுதியாக நிருவகிக்கப்படும் ரீயூனியனின் நிருவாகம் சார்ந்த தலைநகர் ஆகும். இது, இந்தியப் பெருங்கடலிலுள்ள ரீயூனியன் தீவின் வடக்குப் பகுதியில் சான்-டெனீ ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது.

சான்-டெனீ
Saint-Denis
பெல்லெபியர்ரியின் மீதிருந்து காணும்போது சான்-டெனீ
பெல்லெபியர்ரியின் மீதிருந்து காணும்போது சான்-டெனீ
சான்-டெனீ Saint-Denis-இன் சின்னம்
சின்னம்
சான்-டெனீ
Saint-Denis-இன் அமைவிடம்
Map
நாடுபிரான்சு
Overseas region and departmentரீயூனியன்
பெருநகரம்சான் டெனீ
Intercommunalityநார்த் து ல ரீயூனியன்
(Nord de la Réunion - வடக்கு ரீயூனியன்)
அரசு
 • நகரமுதல்வர் (2014-2020) கில்பர்ட் ஆனெட்டி (சோசலிசக் கட்சி)
Area
1
142.79 km2 (55.13 sq mi)
மக்கள்தொகை
 (2012)
1,45,238
 • அடர்த்தி1,000/km2 (2,600/sq mi)
நேர வலயம்ஒசநே+04:00
INSEE/அஞ்சற்குறியீடு
97411 /97400
ஏற்றம்0–2,276 m (0–7,467 அடி)
(avg. 23 m or 75 அடி)
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.

1663ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நகரம் மிகவும் மெதுவாகவே வளர்ந்தது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஏற்பட்ட கிராமப்புற திரள் வெளியேற்றத்தினால் அதிகளவு மக்கள் இங்கு குடியேறினர். முன்னர் ரீயூனியனின் முக்கியத் துறைமுகமாக இந்நகரம் விளங்கியது; ஆயினும் இங்கு நிலவிய ஊகிக்க முடியாத காற்று மற்றும் கடல்நீர் மட்ட ஏற்ற இறக்கத்தினால் ஏற்பட்ட சிரமங்களால், 1880களிலிருந்து அருகிலிருக்கும் செயற்கைத் துறைமுகமான ல போர்ட் (பிரெஞ்சு மொழியில்: துறைமுகம்) சான்-டெனீயிற்கு மாற்றாக விளங்கிவருகிறது. அழகிய கடற்கரை நெடுக அமைந்துள்ள 20 கி.மீ. சாலையானது ல போர்டையும் செயிண்ட் டெனிசையும் இணைக்கின்றது. ஒரு சர்வதேச விமானநிலையம், நூலகங்கள், ஒரு இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் சட்டம், பொருளியல், ஆட்சி இயல் ஆகியவற்றைக் கற்பிக்கும் ஒரு பல்கலைக்கழகமும் இங்குள்ளன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "செயிண்ட் டெனிஸ் - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் 13 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்-டெனீ_,_ரீயூனியன்&oldid=3929702" இலிருந்து மீள்விக்கப்பட்டது