சான்-பால் பெல்மொண்டோ
சான்-பால் பெல்மொண்டோ (Jean-Paul Belmondo, 9 ஏப்ரல் 1933 – 6 செப்டம்பர் 2021) 1960 ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சுத் திரைப்படங்களில் ஏற்பட்ட பெரும் மாற்றத்திற்குக் காரணமானவர்களில் ஒருவராக அறியப்பட்ட பிரெஞ்சு நடிகர் ஆவார். 1960 , 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளின் மாபெரும் பிரெஞ்சு திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவராக அறியப்படுகிறார். ப்ரீத்லெஸ் (1960) மற்றும் தட் மேன் ஃப்ரம் ரியோ (1964) ஆகியவை அவரது சிறந்த திரைப்படங்களில் முக்கியமானதாகும்.
சான்-பால் பெல்மொண்டோ Jean-Paul Belmondo | |
---|---|
1960 இல் பெல்மொண்டோ | |
பிறப்பு | சான்-பவுல் சார்லசு பெல்மொண்டோ 9 ஏப்ரல் 1933 இல் ட பிரான்சு, பிரான்சு |
இறப்பு | 6 செப்டம்பர் 2021 பாரிஸ், பிரான்சு | (அகவை 88)
மற்ற பெயர்கள் | பேபெல் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1953–2011 |
வாழ்க்கைத் துணை | ஏலோடி கான்சுடன்டைன் (1952-1968, மணமுறிவு) நாட்டி தார்டிவெல் (2002-2008. மணமுறிவு) |
பிள்ளைகள் | 4 |
விருதுகள் | சிறந்த நடிகருக்கான சீசர் விருது |
கையொப்பம் |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுபெல்மொண்டோ மேற்கு பாரிஸ், நியூலி -சர்-சீன்,சீனில் பிறந்தார். தற்போது இது ஹூட்ஸ் -டி -ஷைனியில் உள்ளது. பெல்மொண்டோவின் தந்தை பால் பெல்மொண்டோ ஒரு பைட்-நொயர் சிற்பி ஆவார்.இவர் அல்ஜீரியாவில் பிறந்த இத்தாலிய வம்சாவளி ஆவார். அவரின் பெற்றோர் சிசிலியன் மற்றும் பீட்மாண்டீஸ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். [1] [2] [3] ஒரு சிறுவனாக அவர் படிப்பினை விட விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டினார்.குத்துச்சண்டை மற்றும் கால்பந்தில் அதிக ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.
10 மே 1949 அன்று பெல்மொண்டோ தனது தொழில் முறைஞர் அல்லாத குத்துச்சண்டை போட்டியில் முதல் முறையாகக் கலந்து கொண்டார்.பாரிஸில் நடைபெற்ற போட்டியில் ரெனே டெஸ்மரைஸை எதிர்கொண்டு முதல் சுற்றிலேயே அவரை வீழ்த்தினார் .பெல்மொண்டோவின் குத்துச்சண்டை வாழ்க்கையில் தோல்வியினையே சந்திக்காதவராகத் திகழ்ந்தார். ஆனால் இவர் மிகக் குறைவான போட்டிகளிலே கலந்து கொண்டார். அவர் 1949 முதல் 1950 வரை மூன்று நாக் அவுட் வெற்றிகளைப் பெற்றார். [4] "கண்ணாடியில் எனது முகம் மாறத் தொடங்கியபோது நான் குத்துச் சண்டையில் கலந்துகொள்வதனை நிறுத்தினேன் என்று அவர் கூறினார். தனது கட்டாய இராணுவ சேவையின் ஒரு பகுதியாக, அல்ஜீரியாவில் ஆறு மாதங்கள் பணியாற்றினார். [5]
நடிப்பு வாழ்க்கை
தொகுஆரம்ப கலங்களில்
தொகுபெல்மொண்டோ முதன்முதலில் மோலியர் (1956) என்ற குறும்படத்தில் தோன்றினார். அவரது முதல் திரைப்பட பாத்திரம் ஜீன்-பியர் கேசலுடன் ஆன் ஃபுட், ஆன் ஹார்ஸ், மற்றும் ஆன் வீல்ஸ் (1957) எனும் திரைப்படத்தில் ஒரு காட்சியில் தோன்றினார். ஆனால் இவர் நடித்த காட்சி பட வெளியீட்டில் இல்லை. இருப்பினும் எ டாக், எ மவுஸ் அண்ட் எஸ்பூட்னிக் (1958) எனும் திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார்.
பெல்மொண்டோ பி பியூட்டிஃபுல் பட் ஷட் அப் (1958) எனும் நகைச்சுவைத் திரைப்படத்தில் அலைன் டெலோனுடன் இணைந்து நடித்தார். அதைத் தொடர்ந்து மார்செல் கார்னே இயக்கிய யங் சின்னர்ஸ் (1958) படத்தில் ஒரு குண்டராக நடித்தார் .
ஜீன்-லூக் கோடார்ட் இயக்கிய குறும்படமான சார்லோட் அண்ட் ஹெர் பாய்பிரண்ட் (1958) இல் நடித்தார். அதில் இவருக்கு கோதார்ட் என்பவர் பின்ன ணிக் குரல் கொடுத்திருந்தார்.மேலும் 1958 ஆம் ஆண்டில் வெளியான சண்டே எண்கவுன்டர் எனும் திரைப்படத்தில் தோன்றினார். மேலும் அதே ஆண்டில் வெளியான லெஸ் கோபேன்ஸ் டு டிமாஞ்சேவில் இவர் முன்னணிக் கதாப்பாத்திரத்தில் தோன்றினார்.
நடிப்பு
தொகுஇந்த நேரத்தில் அவர் பாரிஸில் ஆஸ்கார் (1958) இல் மேடையில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றார், இது நட்சத்திர பாகங்களில் முன்னணி வகிக்க வழிவகுத்தது. இவற்றில் முதலாவது லினோ வென்ச்சுராவுடன் ஒரு கேங்க்ஸ்டர் கதையான அனைத்து அபாயங்களையும் கருத்தில் கொள்ளுங்கள் (1960). இரண்டாவது ஜீன்-லூக் கோடார்ட்டின் ப்ரீத்லெஸ் (1960) இல் இருந்தது, இது அவரை பிரெஞ்சு புதிய அலைகளில் ஒரு முக்கிய நபராக மாற்றியது .
மேற்கோள்கள்
தொகு- ↑ Bébel – Jean-Paul Belmondo Fanlisting
- ↑ "Famous French people of immigrant origin, Eupedia : France Guide". Eupedia.com. 2013-04-14. பார்க்கப்பட்ட நாள் 2017-08-28.
- ↑ "Belmondo : "J'aimerais bien rejouer"". Leparisien.fr. Le Parisien. 9 April 2015. பார்க்கப்பட்ட நாள் 24 July 2015.
- ↑ "Jean-Paul Belmondo - Amateur Boxing Record". Boxing-scoop.com. பார்க்கப்பட்ட நாள் 2017-08-28.
- ↑ Barry, Joseph (21 June 1964). "That Man Belmondo on a Movie Merry-Go-Round". New York Times: p. X7.