சான் பாப்திசுத்து யோசப் டெலாம்பர்
சான் பாப்திசுத்து யோசப் டெலாம்பர் (Jean Baptiste Joseph Delambre, 19 செப்டம்பர் 1749 – 19 ஆகத்து 1822) என்பவர் பிரெஞ்சு கணிதவியலாளரும், வானியலாளரும் ஆவார். பாரிசு வான்காணகத்தின் இயக்குனராகப் பணியாற்றியவர். வானியலில் பல குறிப்பிடத்தக்க நூல்களை எழுதியவர்.
சான் பாப்திசுத்து யோசப் டெலாம்பர் Jean Baptiste Joseph Delambre | |
---|---|
பிறப்பு | ஏமியன்சு | 19 செப்டம்பர் 1749
இறப்பு | 19 ஆகத்து 1822 பாரிசு | (அகவை 72)
தேசியம் | பிரெஞ்சு |
துறை | வானியல் |
ஆய்வு நெறியாளர் | செரோமி லலாந்தே |
முனைவர் பட்ட மாணவர்கள் | செரார்டு மோல் |
டெலாம்பர் வடக்கு பிரான்சிலுள்ள் ஏமியென்சு நகரில் 1749இல் பிறந்தார். இவர் இளமையில் செவ்வியல் நூல்களை மட்டுமே படித்தார். 36ஆம் அகவைக்குப் பிறகே கணிதமும் வானியலும் கற்றார். 1789இல் வியாழன், சனி கோள்களின் அட்டவணைகளையும் 1792இல் யுரேனசு கோளின் அட்டவணையையும் வெளியிட்டார்.
புதிய பதின்ம அளவை முறையை உருவாக்கி நிறுவ டன்கிர்க்குக்கும் பார்சிலோனாவுக்கும் இடையில் உள்ள கிடைவரை வில்லை (Arc of Meridian) அளந்தார். பிறகு 1795இல் பிரெஞ்சுக் கல்லூரியில் வானியல் பேராசிரியரானார். இறுதிக்காலத்தில் இவர் வானியல் வரலாற்றை ஆறு தொகுதிகளாக உருவாக்கி வெளியிடுவதில் ஈடுபட்டார். 1822 இல் கலை, மற்றும் அறிவியலுக்கான அமெரிக்க அகாதமியில் வெளிநாட்டு கௌரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Book of Members, 1780–2010: Chapter D" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2014.
- Ken Alder: The Measure of All Things – The Seven-Year Odyssey and Hidden Error That Transformed the World (The Free Press; New York, London, Toronto, Sydney, Singapore; 2002; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7432-1675-X)
வெளி இணைப்புகள்
தொகு- A brief biography of Delambre, partly from the 1880 Encyclopædia Britannica