சான் மரீனோ அளவுகோல்

சான் மரீனோ அளவுகோல் (San Marino Scale) சாத்தியம் உள்ள வேற்றுக் கிரக புத்திசாலித்தனமான உயிர்களை இலக்காகக் கொண்டு, பூமியில் இருந்து மேற்கொள்ளப்படும் பரிமாற்றங்கள் தொடர்புடைய ஆபத்துக்களை மதிப்பிடுவதற்குப் பரிந்துரைக்கப்படும் ஒர் அளவுகோலாகும். 2005 ஆம் ஆண்டு [1][2] சான் மரீனோவில் நடைபெற்ற மாநாட்டில் இவான் அல்மார் இந்த அளவுகோலைப் பரிந்துரைத்தார். வியாழன், சனி மற்றும் நெப்டியூன் கோள்களில் இருந்து வெளியிடப்படும் வானொலிகள் இம்மாதிரியில் கருதப்படவில்லை. பின்னர், இந்தியாவில் 2007 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் நடைபெற்ற, அனைத்துலக விண்வெளிப் பயணவியல் கழகத்தின் கூட்டத்தில், இவ்வமைப்பைச் சேர்ந்த வேற்றுலக உயிரி தேடல் திட்டத்தின் நிரந்தர ஆய்வுக்குழு சான் மரினோ அளவுகோலை ஏற்றுக்கொண்டது.

தரவகை அளவுகோல்[1]

தொகு
மதிப்பு சாத்தியமுள்ள தீங்கு
10 வியக்கத்தக்கது
9 தலைசிறந்தது
8 மிகப்பரவலானது
7 உயர்வானது
6 கவனிக்கத்தக்கது
5 இடைநிலையானது
4 மிதமானது
3 சிறியது
2 எளியது
1 மிகச்சிறியது

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 http://iaaseti.org/smiscale.htm பரணிடப்பட்டது 2007-12-08 at the வந்தவழி இயந்திரம் IAA SETI Permanent Study Group: The San Marino Scale
  2. Hecht, Jeff; Paulshuch, H (24 October 2006). "The San Marino Scale: A new analytical tool for assessing transmission risk". Acta Astronautica 60: 57. doi:10.1016/j.actaastro.2006.04.012. Bibcode: 2007AcAau..60...57A. Lay summary – New Scientist. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_மரீனோ_அளவுகோல்&oldid=3243585" இலிருந்து மீள்விக்கப்பட்டது