சாபிலா நேதம்
சாபிலா அரவிந்த் நேதம் (Chhabila Netam)(பிறப்பு 22 மே 1948) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கான்கேர் தொகுதியின் பதினொராவது மக்களவை உறுப்பினர் ஆவார்.
சாபிலா நேதம் Chhabila Netam | |
---|---|
உறுப்பினர் பதினொராவது மக்களவை கான்கர் | |
பதவியில் 1996–1998 | |
முன்னையவர் | அரவிந்த் நேதம் |
பின்னவர் | சோகன் போதை |
பெரும்பான்மை | 24,420 |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 மே 1948 பாயிச்முண்டி, பஸ்தர் மாவட்டம், சத்தீசுகர், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகு1948ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பைஸ்முண்டி கிராமத்தில் பிறந்த சாபிலா, உள்ளூர் அரசுப் பள்ளியில் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றார்.[1]
தொழில்
தொகு1996 இந்தியப் பொதுத் தேர்தலின் போது, இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் அரவிந்த் நேதமுக்கு வாய்ப்பு வழங்க மறுத்தது. ஏனெனில் அவாலா ஊழலில் இவரது பெயர் வெளிவந்தது. இவருக்குப் பதிலாக இவரது மனைவி சாபிலாவை அதிகாரப்பூர்வ வேட்பாளராக்கியது காங்கிரசு.[2] இவர் 219,191 வாக்குகள் பெற்று பாரதிய ஜனதா கட்சியின் சோஹன் பொடாயை தோற்கடித்தார். இவர் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட காங்கர் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.[1][3] இருப்பினும், நாடாளுமன்றம் ஒன்றரை ஆண்டுகளுக்குள் நன்கு கலைக்கப்பட்டு, மீண்டும் தேர்தல் 1998-ல் நடைபெற்றது. இத்தேர்தலில் சாபிலா போட்டியிடவில்லை.[2][4] இவர் 1999 இந்திய பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் 88,191 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொடாயிடம் தோல்வியுற்றார்.[5]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசாபிலா மே 1969-ல் நேதம் என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் ஆவர்.[1] இவர்களின் மகள்களில் ஒருவரான ப்ரீத்தி நேதம் 2008 சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Biographical Sketch: Netam, Smt. Chhabila Arvind". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 20 November 2017.
- ↑ 2.0 2.1 "Congress makes a desperate comeback attempt in Kanker". Rediff.com. 20 September 1999. பார்க்கப்பட்ட நாள் 20 November 2017.
- ↑ "Statistical Report on the General Elections, 1996 to the Eleventh Lok Sabha" (PDF). Election Commission of India. p. 235. பார்க்கப்பட்ட நாள் 21 November 2017.
- ↑ "12th Lok Sabha had the shortest life-span". Rediff.com. 26 April 1999. பார்க்கப்பட்ட நாள் 21 November 2017.
- ↑ "Statistical Report on the General Elections, 1999 to the Thirteenth Lok Sabha" (PDF). Election Commission of India. p. 155. பார்க்கப்பட்ட நாள் 20 November 2017.