சாப்ரான் யுத்தம்

இந்திய விடுதலைப் போராட்டம்

சப்ரான் யுத்தம் (பஞ்சாபி: ਸਭਰਾਵਾਂ ਦੀ ਲੜਾਈ, ஆங்கில மொழி: Battle of Sobraon) என்பது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் சீக்கியப் பேரரசின் கல்சாப்படை எனப்படும் சீக்கியப்படையினருக்கும் இடையில் 1846ல் பஞ்சாபில் சத்லஜ் ஆற்றின் வடக்கேயுள்ள சப்ரான் எனும் சிற்றூரில் நிகழ்ந்த யுத்தமாகும்.[1] முதலாவது ஆங்கில சீக்கியப் போர்களில் இப்போரே ஆங்கிலேயர்கள் செய்த கடுமையான போராகும். சீக்கியப் படைத்தளபதி குலாப்சிங் சீக்கியப்படையைக் கலைத்துவிடுவதாகவும் இதற்குப் பதிலாக காஷ்மீரைக் கொடுக்க வேண்டுமென்றும் போர் நடப்பதற்கு முன்பே உடன்படிக்கை செய்துகொண்டார். அதன்படி போர் உச்சநிலையை அடையும்போது இவர் படைத்தலைவர் பொறுப்பைத் துறந்துவிட்டார். தலைவனில்லாத படையை ஆங்கிலேயர்கள் மிக எளிதாக வென்றுவிட்டனர்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Ian Hernon (2003). Britain's forgotten wars. Sutton. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7509-3162-0. 
  2. எம்.சி.கின்லெய்,ஆல்பெர்ட்.எ,ஆர்துர் சி.ஹொலண்ட். சாப்ரான் யுத்தம். 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாப்ரான்_யுத்தம்&oldid=3367095" இருந்து மீள்விக்கப்பட்டது