சாமந்தமலை

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

சாமந்தமலை (Samanthamalai) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது கிருஷ்ணகிரியிலிருந்து, பெங்களுரு செல்லும் வழியில் 8 கி.மீ தொலைவிலும், வேப்பனப்பள்ளியில் இருந்து 13 கி.மீ தொலைவலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 268 கி.மீ. தொலைவிலும் உள்ளது. [1]

சாமந்தமலை
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இ. சீ. நே. (ஒசநே+5:30)

மக்கள் தொகை தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சாமந்தமலை மக்கள்தொகை சுமார் 3,000 ஆகும். இதில் ஆண்கள் 49% பெண்கள் 51%. ஆவர் இங்கு வாழும் மக்கள் பெரும்பன்மையோனோர் இந்து மதத்தைச்  சார்ந்தவர்கள். கிருத்துவ மதத்தை சார்ந்த சிறுபான்மையினரும் வசிக்கின்றனர். இங்கு பரவலாக பேசப்படும் மொழிகள்  தமிழ், கன்னடம், தெலுங்கு போன்றவை ஆகும்.

போக்குவரத்து தொகு

சாமந்தமலை கிராமம்  தேசிய நெடுஞ்சாலை எண் 7 க்கு மிக அருகில் உள்ளது. பேருந்து எண் : 55, 11A, 11B, 13B ,13 போன்றவற்றில் செல்லலாம். தானி வசதியும் உளளது.

இடங்கள் தொகு

சாமந்தமலை பஞ்சாயத்தில் முக்கியமாக உள்ள கிராமங்கள்:

  • குட்டூர்
  • சின்ன குட்டூர்
  • ஒன்டியூர்
  • பெத்தம்பள்ளி
  • பச்சிகானப்பள்ளி
  • பண்டபள்ளி

பள்ளிகள் தொகு

  • அரசு ஆரம்ப பள்ளி, சாமந்தமலை
  • அரசு ஆரம்ப பள்ளி, குந்தாரப்பள்ளி
  • அரசு உயர் நிலைப் பள்ளி, குந்தாரப்பள்ளி
  • ஸ்ரீ சத்ய சாய் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி , குந்தாரப்பள்ளி 
  • ஸ்ரீ சரஸ்வதி வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குந்தாரப்பள்ளி

குறிப்புகள் தொகு

  1. "Samanthamalai". http://www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 22 சூலை 2017. {{cite web}}: External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமந்தமலை&oldid=3313632" இலிருந்து மீள்விக்கப்பட்டது