சாமியும் நண்பர்களும் (நாவல்)
சாமியும் நண்பர்களும் (Swami and Friends) ஆர். கே. நாராயண் என்ற இந்திய ஆங்கில மொழி எழுத்தாளர் எழுதிய முத்தொகுப்புப் புதினங்களின் முதல் தொகுப்பாகும். நாராயணனின் முதல் புதினத்தின் பின்னணி பிரித்தானிய இந்தியாவில் மால்குடி என்று அழைக்கப்படும் ஒரு கற்பனையான நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இம்முத்தொகுப்பில் 'தி பேச்சுலர் ஆப் ஆர்ட்ஸ்', 'ஆங்கில ஆசிரியர்' ஆகியவை இரண்டாம் மற்றும் மூன்றாம் புத்தகங்களாகும்.
நூலாசிரியர் | ஆர். கே. நாராயணன் |
---|---|
அட்டைப்பட ஓவியர் | ஆர். கே. லட்சுமண் |
நாடு | இந்தியா |
மொழி | ஆங்கிலம் |
வகை | புதினம் |
வெளியிடப்பட்டது | 1935 ஆமில்ட்டன் |
ஊடக வகை | அச்சு |
பக்கங்கள் | 459 |
ISBN | 978-0-09-928227-3 |
OCLC | 360179 |
அடுத்த நூல் | தி பேச்சுலர் ஆப் ஆர்ட்ஸ் |
மால்குடி பள்ளி நாட்கள் - சாமியும் நண்பர்களும் என்ற புதினத்தின் சற்று சுருக்கப்பட்ட பதிப்பாகும். 'மால்குடி நாட்களிலிருந்து சாமி', 'ஆலமரத்தடியில்'[1]= ஆகிய இரு கூடுதல் கதைகளையும் உள்ளடக்கியது.
பதிப்பகம்
தொகுசாமியும் நண்பர்களும் என்ற நாவல் ஆர். கே. நாராயண்[2] எழுதிய முதல் நாவலாகும். இது ஆக்ஸ்போர்டில் படித்த அண்டை வீட்டாரான நண்பரின் ("கிட்டு" பூர்னா) முயற்சியினால் வெளியிடப்பட்டது. அந்த நண்பரின் மூலம் நாராயணனின் படைப்பை பற்றி அறிந்த கிரஹாம் கிரீன் அதில் நாட்டம் கொண்டு அந்த புத்தகத்தைப் பற்றி புகழ் பெற்ற ஆங்கில வெளியீட்டாளரிடம் (ஹமிஷ் ஹாமில்டன்)[3] பரிந்துரைத்தார். ருயார்ட் கிப்ளிங்கின் 'ஸ்டால்கி & கோ'என்ற தலைப்புடன் 'சாமியும் நண்பர்களும்'என்ற தலைப்பு ஒத்திருக்கும் காரணத்தால் 'சாமி, தி டேட்' என்ற தலைப்பை மாற்றியமைத்த பெருமை கிரஹாம் கிரீனையே சேரும்.கிரீன் நாவல் வெளையீடிற்கான ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்து, நாவல் வெளியிடும் வரை அதில் ஈடுபாட்டுடன் இருந்தார்.
ஆல்பர்ட் மிஷன் பள்ளி நண்பர்கள்
தொகுசாமிநாதன்: மால்குடி ஆல்பர்ட் மிஷன் பள்ளியில் படிக்கும் ஒரு பத்து வயது சிறுவன். அவர் விநாயகர் மால்குடி தெருவில் வசித்து வருகிறார். பின்னர் அவர் போர்ட் உயர்நிலை பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
மணி: ஆல்பெர்ட் மிஷன் பள்ளியில் சாமியின் வகுப்பு மாணவர், அபு லேனில் வசித்து வருகிறார், அவர் 'எதற்கும் உதவாதவர்' என்று அழைக்கப்படுகிறார். அவர் சில நேரங்களில் ஒரு தடியை வைத்து தனது எதிரிகளை அடித்து நொருக்கிவிடுவதாக அச்சுறுத்துவார்.
ராஜம்: ஆல்பெர்ட் மிஷன் பள்ளியில் சாமியின் வகுப்பு மாணவர்,, லாலி விரிவாக்கத்தில் வசிக்கிறார். அவரது தந்தை மால்குடியின் துணை போலீஸ் கண்காணிப்பாளர் ஆவார். அவர் முன்னர் சென்னை ஆண்கள் ஆங்கிலேயப் பள்ளியில் படித்தார். அவர் மால்குடி கிரிக்கெட் கழகத்தின் கேப்டன் ஆவார்.(வெற்றி யூனியன் பதினொன்று).
சோமு: முதல் பார்ம்-ஏ பிரிவு கண்காணிப்பாளர், கபீர் தெருவில் வசிக்கிறார். அவர் முதல் பார்மில் தோல்வியடைந்து "தானாகவே குழுவிலிருந்து விலக்கப்படுகிறார்".
சங்கர்: முதல் பார்ம்-ஏ பிரிவில் சாமியின் வகுப்பு மாணவர்.அவரது தந்தை பருவ முடிவில் மாற்றப்பட்டார். அவர் வகுப்பில் மிகச்சிறந்த சிறுவன்.
சாமுவேல் ("பட்டாணி"): முதல் பார்ம்-ஏ பிரிவில் சாமியின் வகுப்பு மாணவர். அவரது உயரம் காரணமாக அவர் "பட்டாணி" என்று அழைக்கப்படுகிறார்.